காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கனிசமாக அதிகரித்துள்ளது!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 9,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 8,400 கனஅடியில் இருந்து 9,400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.470 டிஎம்சியகவும் அதிகரித்துள்ளது.
இம்மாதம் துவங்கி வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்துள்ளதால், தென் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி நதி பாயும் பகுதிகளில் மழை நீர் நிரம்பி வெள்ளம் போல காட்சியளிக்கிறது. இதனைதொடர்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் கனிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரமாக தென் மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு நீர வரத்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் கிடு கிடு என உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் மேட்டூர் அணையின் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது.