வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஏற்படும் வானிலை மாறுதல்கள்; மழை நிலவரம்

 குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும். தேதிவாரியாக மழை நிலவரம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 21, 2021, 01:38 PM IST
  • குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
  • அடுத்த சில நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக மழை
  • மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஏற்படும் வானிலை மாறுதல்கள்; மழை நிலவரம் title=

சென்னை: தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும். தேதிவாரியாக மழை நிலவரம்: 

21.10.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை  பெய்ய வாய்ப்புள்ளது .

22.10.2021 & 23.10.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.  

24.10.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.  

25.10.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களான (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.  

Also Read | வைகோ மகனுக்கு பதவி எதிரொலி : முக்கிய நிர்வாகி விலகல்

சென்னையில் அடுத்த  48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 
 சங்கரன்கோவில் (தென்காசி), மானாமதுரை (சிவகங்கை) தலா 9,சோளிங்கர் (ராணிப்பேட்டை) 8, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), கடவனூர் (கல்லக்குறிச்சி), மஞ்சளாறு (தேனி) தலா 7,வல்லம் (தஞ்சாவூர்), மங்களபுரம் (நாமக்கல்), குன்னூர் (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) தலா 6, கோத்தகிரி (நீலகிரி), கெட்டி (நீலகிரி), நாங்குநேரி (திருநெல்வேலி), ஜி பஜார் (நீலகிரி), கயத்தார்  (தூத்துக்குடி) தலா 5, கொடைக்கானல் (திண்டுக்கல்),  குந்தா பாலம் (நீலகிரி), ஆம்பூர் (திருப்பத்தூர்), கொட்டாரம்  (கன்னியாகுமரி), வெம்பக்கோட்டை  (விருதுநகர்), கடவூர் (கரூர்), பவானிசாகர் (ஈரோடு), சூலூர் (கோயம்புத்தூர்), தஞ்சாவூர் (தஞ்சை) , பாலவிடுதி (கரூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), சின்னக்கல்லார்  (கோவை), கூடலூர் (தேனி), பர்லியார் (நீலகிரி) தலா 4,

வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26 அக்டோபர்  ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

Read Also | அம்மா உணவகங்களில் மீண்டும் சப்பாத்தி விற்பனை

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 
வங்கக் கடல் பகுதிகள்

21.10.2021: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் மீட வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 அரபிக்கடல் பகுதிகள்                                                      

21.10.2021: கேரளா கடலோரப் பகுதி, லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு:  imdchennai.gov.in  இணையதளத்தை காணவும்:     

சங்கரன்கோவில் (தென்காசி), மானாமதுரை (சிவகங்கை) தலா 9,சோளிங்கர் (ராணிப்பேட்டை) 8, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), கடவனூர் (கல்லக்குறிச்சி), மஞ்சளாறு (தேனி) தலா 7,வல்லம் (தஞ்சாவூர்), மங்களபுரம் (நாமக்கல்), குன்னூர் (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) தலா 6, கோத்தகிரி (நீலகிரி), கெட்டி (நீலகிரி), நாங்குநேரி (திருநெல்வேலி), ஜி பஜார் (நீலகிரி), கயத்தார் ஏஆர்ஜி (தூத்துக்குடி) தலா 5,

கொடைக்கானல் (திண்டுக்கல்), கயத்தார் (தூத்துக்குடி), குந்தா பாலம் (நீலகிரி), ஆம்பூர் (திருப்பத்தூர்), கோட்டாரம் (கன்னியாகுமரி), வேம்பக்கோட்டை (விருதுநகர்), கடவூர் (கரூர்), பவானிசாகர் (ஈரோடு), சூலூர் (கோயம்புத்தூர்), தஞ்சாவூர் (தஞ்சை) , பாலவிதிதி (கரூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), சின்னக்கலர் (கோவை), கூடலூர் (தேனி), பர்லியார் (நீலகிரி), தலா 4,

உத்தமபாளையம் (தேனி), மதுரை விமான நிலையம் (மதுரை), வாடிப்பட்டி (மதுரை), சோலையார் (கோவை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), சேலம் (சேலம்), போடிநாயக்கனூர் (தேனி), கோவில்பட்டி (திருச்சி), புதலூர் (தஞ்சாவூர்), மேட்டுப்பாளையம் (கோவை), விளாத்திகுளம் (தூத்துக்குடி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), மணியாச்சி (தூத்துக்குடி), உதகமண்டலம் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி) ஆவலூர்பேட்டை (விழுப்புரம்) தலா 3, பொன்னை அணை (வேலூர்), மேலத்தூர் (வேலூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), திருச்சுழி (விருதுநகர்), திருமங்கலம் (மதுரை), குடியாத்தம் (வேலூர்), பொன்மலை (திருச்சி), மணப்பாறை (திருச்சி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), இலுப்பூர் (புதுக்கோட்டை), திருப்புவனம் (சிவகங்கை), கோயம்புத்தூர் தெற்கு (கோயம்புத்தூர்), சிவகங்கை (சிவகங்கை), பீளமேடு  (கோயம்புத்தூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), சூரலக்கோடு (கன்னியாகுமரி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), திருவாரூர் (திருவாரூர்), சிவகிரி (தென்காசி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை) தலா 2,.

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), நடுவட்டம் (நீலகிரி), எருமப்பட்டி (நாமக்கல்), கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை), அரிமளம் (புதுக்கோட்டை), திருச்சி விமான நிலையம் (திருச்சி), நன்னிலம் (திருவாரூர்), களவை AWS (ராணிப்பேட்), நத்தம் ), ஏற்காடு (சேலம்), க்ளென்மோர்கன் (நீலகிரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), திருமனூர் (அரியலூர்), மயிலாடி (கன்னியாகுமரி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), அன்னூர் (கோவை), சத்தியமங்கலம் (ஈரோடு), விரகனூர் அணை (மதுரை), சாத்தூர் (விருதுநகர்), தேக்கடி (தேனி), செட்டிகுளம் (பெரம்பலூர்), கடலாடி (ராமநாதபுரம்), ராதாபுரம் (திருநெல்வேலி), ஆத்தூர் (சேலம்), திருவையாறு (தஞ்சாவூர்), எடப்பாடி (சேலம்), வைகை அணை (தேனி) ), வாலாஜா (ராணிப்பேட்டை), தாராபுரம் (திருப்பூர்), தரமபுரி (தர்மபுரி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), பெரியார் (தேனி), கடம்பூர் (தூத்துக்குடி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), கரூர்.பரமத்தி (கரூர்), சங்கராபுரம் (கல்லக்குறிச்சி), மன்னார்குடி (திருவாரூர்), சோளவந்தான் (மதுரை), பல்லடம் (திருப்பூர்), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), கிராண்ட் ஆனைகட் (தஞ்சாவூர்), புள்ளம்பாடி (திருச்சி) போட் கன்னியாகுமரி), புதுச்சேரி (புதுச்சேரி), கமுதி (ராமநாதபுரம்), ராஜபாளையம் (விருதுநகர்), விராலிமலை (புதுக்கோட்டை), பூண்டி (திருவள்ளூர்), ஒடஞ்சத்திரம் (திண்டுக்கல்), பெரியகுளம் (தேனி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), வேலூர் (வேலூர்), வீரபாண்டி (தேனி), போளூர் (திருவண்ணாமலை) தலா 1.

Read Also | பொள்ளாச்சி வழக்கு: குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ் சஸ்பெண்ட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News