வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை!

TN Rains: சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில்,  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்கிறார்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 1, 2022, 01:30 PM IST
  • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  • தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
  • தமிழக முதலமைச்சர் இன்று ஆலோசனை
வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை! title=

சென்னை: சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில்,  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்கிறார். வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வரும் நிலையில் சென்னை செங்குன்றத்தில் அதிகபட்சமாக 13 செண்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று இரவு முதல் துவங்கிய மழையானது காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்து உள்ளது. செங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் நாறவாரி குப்பம் பேரூராட்சி சார்பில் அந்த தண்ணீரானது போர்க்கால அடிப்படையில் வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் செங்குன்றம் பேருந்து நிலையத்திலேயே சென்னைக்கு வருவதற்கான வழித்தடமாக உபயோகப்படுத்துவார்கள். இதன் ஒரு பகுதியாக இன்று செங்குன்றம் பேருந்து நிலையத்தில் மழையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை துவக்குவதற்காக காலையில் நனைந்தபடியும் குடை பிடித்த படியும் அரசு பேருந்துகளில் பயணிப்பதை பார்க்க முடிந்தது.

மேலும் ஏற்கனவே திருவள்ளூர் மற்றும் இதர இரண்டு மாவட்டங்களுக்கும் கனமழை காரணமாக வானிலை மையம் சார்பில் ஆரஞ்சு விடுக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்துள்ள நிலையில் இன்று செங்குன்றம் பேருந்து நிலையத்தில் மாணவ மாணவிகளின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

மேலும் படிக்க | மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்னை புறக்கணியுங்கள் - அண்ணாமலை அடாவடி

மேலும் அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு தொடர் மழை இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தீயணைப்புத்துறை காவல்துறை பேரிடர் மேலாண்மை மீட்புத்துறை ஆகிய துறைகளில் இருந்து வீரர்கள் தற்போது செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்

அதேபோல மருத்துவ குழு ஒன்றும் நாறவாரி குப்பம் பேரூராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து தொடர் மழை பெய்து வந்தாலும் இந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் தொடர் மின்சாரம் மின்வாரியத்துறை அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மழை அதிகமாகும் பட்சத்தில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்குமானால் அந்த தாழ்வான பகுதிகளில் உள்ள பொது மக்களை மீட்டு அவர்களை அரசு பள்ளிகள் மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் அவர்கள் இன்று காலையில் இருந்து தன்னுடைய வீட்டின் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் மழை பாதித்த பகுதிகளுக்கு சென்று அவர்  நேரில் பார்வையிட உள்ளார்.

மேலும் செங்குன்றம் பகுதிகளுக்கு உட்பட்ட வடம்பெரும்பாக்கம் விளாங்காடு பக்கம் வடகரை புல்லி லைன் கிராண்ட் லைன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்களும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் தற்போது செங்குன்றம் பகுதியில் போர்க்கால அடிப்படையில் மழை மீட்பு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு அதிகபட்சமாக 13 செண்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க | கொட்டித் தீர்த்த மழை... 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - வெதர்மேன் கூறுவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News