சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆரோக்கியத்தில் முன்னேற்றம், ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் காமராஜின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், தற்போது வென்டிலேட்டரில் இருந்து வெளியே வந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளது. எனவே அமைச்சர் காமராஜ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும் மருத்துமனை நிர்வாகம் தெரிவித்தது. கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக அமைச்சர் காமராஜ் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
அமைச்சர் காமராஜ் சிகிச்சை பெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அதன்படி,
கொரோனா பாதித்து சிகிச்சைப் பெற்றுவரும் தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் இருந்து இன்று மாலை அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்
காமராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் குழுவின் உழைப்பின் காரணமாக உடல் நலம் தேறியுள்ளார். 95% நுரையீரல் பாதிப்புடன் இருந்த அவர் மறுபிறவி எடுத்துள்ளார். இன்று மாலை அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். சவாலான இந்த சிகிச்சை எங்களுக்கு ஒரு அனுபவம். இவ்வளவு பாதிப்பு இருந்த ஒருவரை மீட்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. முழு உடல் நலமுடன் அமைச்சர் காமராஜ் உள்ளார். இன்னும் 3 வாரங்களில் அவர் மக்கள் பணியில் ஈடுபடுவார். மக்கள் பிரதிநிதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அமைச்சர் காமராஜ் ஒரு உதாரணம்’ என்று தெரிவித்தார்.
Also Read | World 02 February 2021: இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மகன் இனியன் பேசினார். அப்போது அவர், ‘ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சரியான நேரத்தில் சரியான சிகிச்சை வழங்கினர். செயற்கை சுவாச சிகிச்சை வழங்கி, ஆண்டிபயாடிக் வழங்க தொடங்கினர். கவலைப்படாதே, அப்பா மீண்டுவிடுவார் என முதல்வர் தொலைபேசியில் கூறினார். எக்மோ சிகிச்சைக்காகத் தான் என் அப்பாவை எம்.ஜி.எம் கொண்டு வந்தோம். அதிர்ஷ்டவசமாக எக்மோ தேவைப்படவில்லை. முதல்வர், துணை முதல்வர் சுகாதாரத்துறை அமைச்சர் தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்தனர்’ என்று தெரிவித்தார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR