பகீர் தகவல்; கணவனைக் கொன்று கிணற்றில் வீசிய மனைவி

புதுக்கோட்டையில் கணவரைக் கொன்று சடலத்தைக் கிணற்றில் வீசிய மனைவி  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2021, 06:30 AM IST
பகீர் தகவல்; கணவனைக் கொன்று கிணற்றில் வீசிய மனைவி title=

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கு, நந்தினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமானது முதல் இவர்கள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு, பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் பாண்டித்துரை மாயமாகினார். குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால், பாண்டித்துரையின் தாய் ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் (Crime News) வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சந்தேகத்தின் பேரில், பாண்டித்துரை மனைவி நந்தியினிடமும் விசாரணை மேற்கொண்டனர். 

ALSO READ | திண்டுக்கல்லில் பயங்கரம்! பெண் தலையை வீட்டு வாசலில் வீசிய கொலையாளிகள்

அதன்படி கடந்த 20ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் பாண்டித்துரை, தனது கழுத்தை நெரித்ததாகவும், அதனால் கத்தியை எடுத்து அவரது தலையில் தாக்கியதில் பாண்டித்துரை உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். மேலும், வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் சடலத்தை வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல், நந்தினி நாடகம் ஆடியதும் அம்பலமானது. மேலும் கணவர் காணவில்லை என கூறி குடும்பத்தாருடன் சேர்ந்து இவரும் கணவரைத் தேடுவதுபோல் நடித்துள்ளார்.

இதையடுத்து கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த பாண்டித்துரையின் உடலை மீட்ட ஆதனக்கோட்டை போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | Domestic violence:பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கொன்ற மகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News