விரைவில் நலம்பெற்று மீண்டும் வருவேன்: விஜயகாந்த்

தொண்டர்கள் தான் எனது முதல் கடவுள் என்றும் விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 12, 2020, 05:38 PM IST
விரைவில் நலம்பெற்று மீண்டும் வருவேன்: விஜயகாந்த்

தொண்டர்கள் தான் எனது முதல் கடவுள் என்றும் விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக சார்பில் சென்னை, அம்பத்தூர் பகுதியில் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர்.

பொங்கல் விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

தொண்டர்கள் தான் எனது முதல் கடவுள்.  விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் வருவேன். தேமுதிக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 

இவ்வாறு அவர் கூறினார். 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

More Stories

Trending News