Crime: என் மனைவியை நான் அடிப்பேன், உனக்கென்ன... கள்ளக்காதனுக்கு அரிவாளால் வெட்டு

கள்ளக் காதல் விவகாரத்தினால், ஏற்பட்ட சண்டையில், மனைவியையும், கள்ளக் காதலனையும் கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2022, 01:15 PM IST
Crime: என் மனைவியை நான் அடிப்பேன், உனக்கென்ன... கள்ளக்காதனுக்கு அரிவாளால் வெட்டு title=

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பெருமானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும், தொண்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி நதியாவுக்கும்  கடந்த 4 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

இதனை அறிந்த கணவர் பழனிசாமி பலமுறை மனைவியை எச்சரித்தும் அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவி நதியாவை பழனிச்சாமி அடித்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | மரம் அறுக்கும் இயந்திரத்தால் மனைவி மற்றும் பிள்ளைகளை அறுத்து கொன்ற ஐடி ஊழியர்!

இந்த நிலையில் இன்று பழனிச்சாமி வீட்டுக்கு வந்த நதியாவின் கள்ளக்காதலன் விஜய் 'நீ ஏன் நதியாவை அடித்தாய்' என பழனிச்சாமியிடம் கேட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த பழனிச்சாமி "என் மனைவியை நான் அடிப்பேன் உனக்கு என்னடா" என கேட்டு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டியதில் தலையிலும் காதிலும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

காயமடைந்த விஜய்யை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து  கணவர் பழனிச்சாமி மீது வழக்குப் பதிந்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக் காதல் விவகாரத்தினால், ஏற்பட்ட சண்டையில், மனைவியையும், கள்ளக் காதலனையும் கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | தாகத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய பெண் - காதலனுடன் சிக்கியது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News