நீங்களும் ஜெயிக்கனுமா ? - பிரக்ஞானந்தா சொன்ன வின்னிங்க் ட்ரிக்ஸ் !

செஸ் போட்டிகளில் தன்னுடைய வெற்றியின் ரகசியம் குறித்து பிரக்ஞானந்தா பேசியுள்ளார். 

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 21, 2022, 01:40 PM IST
  • காஞ்சி ஸ்ரீ காமாட்சி கோயிலில் சாமி தரிசனம்
  • தாயின் கனவு நிறைவேறியதாக உருக்கம்
  • வெற்றி குறித்து வெளிபடையான பேச்சு
நீங்களும் ஜெயிக்கனுமா ? - பிரக்ஞானந்தா சொன்ன வின்னிங்க் ட்ரிக்ஸ் ! title=

உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியவர் சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. செஸ் உலகில் இவர் பல்வேறு பிரம்மாண்ட சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி  வரும் ஜீலை 28ல் துவங்கி ஆகஸ்ட்  வரை நடைபெறுகிறது.

இதில் 187 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட  செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், பங்கேற்கவுள்ள செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எட்டாவது தேசிய யோகா தின நிகழ்ச்சியில் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா கலந்துகொண்டார்.  

Praggnanandhaa,Rameshbabu,indian,chess,grandmaster,பிரக்ஞானந்தா ,செஸ்

பின் தாயுடன் சென்றவர் உலகப் புகழ்பெற்ற காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த செஸ் மூடர் பிரக்ஞானந்தாவிற்கு கோயில் நிர்வாகம் சார்பில் காமாட்சி அம்மன் திருவுருவப்படம் அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது தாயாரின் நீண்ட நாள் ஆசையாக இருந்த காமாட்சி அம்மன் தரிசனம் தற்போது நிறைவு பெற்றதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

Praggnanandhaa,Rameshbabu,indian,chess,grandmaster,பிரக்ஞானந்தா ,செஸ்

மாமல்லபுரம் போட்டிக்கான பயிற்சிகள் சிறப்பாக இருந்ததாகவும், இப்போட்டி தமிழகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியவர், இதற்காக செஸ் போர்டு வாரியத்திற்கும் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகப் பேசினார். 

மேலும் படிக்க | இங்கிலாந்து விமானத்தை தவறவிட்ட அஸ்வின் - கடைசியில் இப்படி ஆயிடுச்சே!

தான் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் ஒருபோதும் செஸ் போட்டியின்போது வெற்றி எனும் நோக்கில் செயல்படாமல் தனது திறமையை வெளிப்படுத்துவதில் வெற்றி கிடைக்கிறது என ரகசியம் உடைத்தார். இந்நிகழ்வின்போது அவரது தாயார் நாகலட்சுமி மற்றும் பயிற்சியாளர் ரமேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க | கம்பீரை பேட்டால் வெளுத்த தினேஷ் கார்த்திக்... ஆதரவு கொடுத்த சுனில் கவாஸ்கர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News