மயிலாடுதுறையில் கடந்த மே மாதம் திருமணமான 2 ஆண்டுகளுக்குள் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆர்டிஓ, பாலையூர் போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சீர்வரிசை பொருட்களை திருப்பிக் கேட்டபோது பாலையூர் போலீஸார் மிரட்டுவதாக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது? இங்கே காணலாம்.
மயிலாடுதுறையை அடுத்த திருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகள் தேன்மொழிக்கு 2022-ஆம் ஆண்டு குத்தாலம் கீழப்பருத்திக்குடி ஊராட்சி நாகம்பாடி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை-மரகதம் ஆகியோரின் மகன் பாரதிராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 8 மாதங்களில் பாரதிராஜா வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
தேன்மொழி மாமியார் குடும்பத்தினருடன் தங்கி இருந்த நிலையில், கடந்த மே மாதம் 14-ஆம் தேதி வீட்டின் அறையில் தூக்கு போட்டு இறந்து விட்டதாக மாமியார் மரகதம் வரதராஜனுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். மகளின் மரணம் குறித்து மாமனார் சாமிதுரை, மாமியார் மரகதம், நாத்தனார் பிரியா மற்றும் நந்தினி மற்றும் கணவர் பாரதிராஜா ஆகியோர்மீது சந்தேகம் இருப்பதாக வரதராஜன் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை! மேட்டுப்பாளையத்தில் சோகம்!
இந்த நிலையில், இதுகுறித்து, மயிலாடுதுறை ஆர்டிஓ மற்றும் பாலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜூன் 16-ஆம் தேதி தேன்மொழிக்கு சீர்வரிசையாக கொடுத்திருந்த 7 பவுன் நகை, புல்லட் மற்றும் சீர்வரிசை பொருள்களை திருப்பித் தருமாறு வரதராஜன் கேட்டுள்ளார். அதற்கு பாரதிராஜா குடும்பத்தினர் நாங்கள் ஐந்து ஊர் கிராம பஞ்சாயத்தார்கள் சேர்ந்து முடிவு செய்த பிறகு சொல்கிறோம் என்று கூறியதுடன், சில தகாத வார்த்தைகளை கூறி வரதராஜன் தரப்பினரிடம் தகராறு செய்துள்ளனர்.
இதுகுறித்து வரதராஜன் பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஜூன் 18-ஆம் தேதி அவர்களை பாலையூர் காவல் நிலையத்துக்கு அழைத்த காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சண்முகம் ஆகியோர் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டால் சீர்வரிசை பொருட்களை திருப்பித் தருவதாக கூறியுள்ளனர். இதற்கு வரதராஜன் தரப்பினர் ஒத்துக் கொள்ளாததால் அனைவரும் அவர்களை மிரட்டி வெளியில் அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர், கலைச்செல்வியின் மரணம் கொலையா? தற்கொலையா என உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீர்வரிசை பொருட்களை மீட்டுத்தரவும் வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர்.
பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தீர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!
உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
மாநில உதவிமையம்: 104
மேலும் படிக்க | 2026 தேர்தல் கூட்டணிக்கு தயராகிறாரா விஜய்... அவர் குறிப்பிடும் சில கட்சிகள் எது..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ