புதுச்சேரி பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் ஷக்திரிய குருகுலம் கடந்த 10 வருடமாக மாணவர்களுக்கு போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் சிலம்பம், போர் சிலம்பம், குஸ்தி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, மல்யுத்தம், வர்மக்கலை, தரைப்பாடம், உடற்கட்டு பாடம், ஆகிய பாரம்பரிய கலைகளை பயிற்றுவித்து வருகின்றது.
மேலும், வருடம் தோறும் பாரம்பரிய கலைகளை பாதுகாத்திடும் வகையில் உலக கரலாகட்டை தினத்தன்று உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று பூரணங்குப்பத்தில் உலக கரலாகட்டை தினம் மற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
ALSO READ | இவ்வளவு முகமூடிகளை சில நொடிகளில் அணிந்து உலக சாதனை - வைரல் வீடியோ
இதனை புதுச்சேரி சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். இதில் மும்பையைச் சேர்ந்த திரிஷா என்ற பெண் 2.600 கிலோ எடை கொண்ட கரலா கட்டையை இடுப்பு சுற்று என்ற முறையில் 30 நிமிடத்தில் 1,082 முறை சுற்றி உலக சாதனை படைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஹரிஹரன் கெண்டைக்கால் சுற்று என்ற முறையில் 30 நிமிடத்தில் 1360 முறை சுற்றி உலக சாதனை படைத்தார். இதேபோன்று சிலம்பாட்ட குருகுல நிறுவனர் கலைமாமணி ஜோதிசெந்தில்கண்ணன், உடும்பு சுற்று என்ற முறையில் 30 நிமிடத்தில் 1304 முறை சுற்றி உலக சாதனை படைத்தார். இதுபோன்று ஐந்து பேர் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற வர்களை வாழ்த்தினார்.
ALSO READ | ஒரே நாளில் 20 லட்சம் கோவிட் பரிசோதனைகளை செய்து உலக சாதனை படைத்தது இந்தியா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR