ஒரு செயலியை வெறுமனே இன்ஸ்டால் செய்துவிட்டு, தேவையில்லாதபோது அன்இன்ஸ்டால் செய்துவிட்டால் மட்டும் அந்த செயலி நீக்கிவிட்டதாக அர்த்தம் கிடையாது. நீங்கள் டெலீட் செய்தால் கூட அன்இன்ஸ்டால் செய்த செயலியின் எச்சங்கள் உங்கள் மொபைலில் இருந்து கொண்டே இருக்கும். அவை உங்களை உளவு பார்த்துக் கொண்டே இருக்கும். இந்த தகவல் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம், ஆனால் உண்மை இதுதான். அதனால் எல்லோரும் செயலியை அன்இன்ஸ்டால் செய்யும் முன் சில விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.
ஏனென்றால் நீங்கள் செயலியை இன்ஸ்டால் செய்யும்போது அதன் பிரைவசி அக்ரிமென்டுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக ஒப்புக் கொண்டுதான் ஸ்மார்ட்போனில் செயல்பட அனுமதிக்கிறீர்கள். அந்த அக்ரீமென்டில் தனிப்பட்ட தகவல்களை எடுத்துக் கொள்ளவும் நீங்கள் அனுமதி வழங்குகிறீர்கள். இதனை ஒரு வழக்கமான விதிமுறைகளில் ஒன்றாகவே எல்லா செயலி நிறுவனங்களும் வைத்திருக்கின்றன. அதனால் செயலியை நீக்கும்போது அவர்களுக்கு கொடுத்த அனுமதிகளை எப்படி நீக்குவது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சைபர் செக்யூரிட்டி நிறுவனர் செயலிகளை குறித்து பேசும்போது, "பொதுவாக எல்லோரும் ஷாப்பிங் செய்ய, வங்கி பணப்பரிவர்த்தனை செய்ய, இரவு உணவை ஆர்டர் செய்ய, சவாரி செய்ய மற்றும் குழந்தைகளைக் கண்காணிக்க என ஒவ்வொன்றுக்கும் செயலிகளை பயன்படுத்துகிறோம். ஆனால், அந்த சேவையை கொடுக்கும் செயலிகளுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்கள், வாழ்க்கை முறை மற்றும் விருப்பங்கள் உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ள அனுமதி கொடுக்கிறோம். அப்படியான தரவுகள் செயலிகளிடம் இருப்பது என்பது பாதுகாப்பானது அல்ல" என்கிறார்.
ஒவ்வொரு செயலியும் மற்றொரு செயலியுடன் ஏதாவதொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருக்கும். உதாரணமாக நீங்கள் பயன்படுத்தும் டேட்டிங் செயலிக்கும், முகநூலுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கும். இரு செயலிகளும் பரஸ்பரம் உங்களின் தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ளும். அதற்கேற்ப விளம்பரங்களும், நீங்கள் வாங்க வேண்டிய பொருட்கள் குறித்த திணிப்பும் தினம்தோறும் நடந்து கொண்டே இருக்கும். இதில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றால் செயலிகளை எப்படி அகற்றுவது என தெரிந்து கொள்வது அவசியம்.
ஒரு செயலியை முறையாக டெலீட் செய்வது எப்படி?
- முதலில் செயலியில் இருக்கும் அனைத்து டேட்டாக்களையும் நீக்க வேண்டும். "தனியுரிமை," "அக்கவுண்ட் செட்டிங்ஸ்" அல்லது "செக்யூரிட்டி" ஆகியவற்றின் கீழ் செயலியில் சேமிக்கப்பட்ட டேட்டாக்களை நீக்க வேண்டும். எப்போதும் செயலிகளுக்கு செல்லும்போது கூகுள் போன்ற Search Engine -கள் வழியாக உள்ளே செல்வது இதுபோன்ற தகவல் சேமிப்பில் இருந்து பாதுகாக்கும்.
- இரண்டாவது நீங்கள் டெலீட் செய்ய விரும்பும் செயலியின் செட்டிங்ஸூக்கு சென்று linked Accounts ஆப்சனில் அந்த செயலி உங்களை எப்படியெல்லாம் தொடர்புகொள்ளலாம் என்பற்கு நீங்கள் அனுமதி கொடுத்திருக்கும் Facebook, Instagram அல்லது கூகுள் செயலிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தால் அந்த இணைப்புகளை நீங்கள் துண்டிக்க வேண்டும்.
- ஒருவேளை ஒரு செயலியில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை உங்களால் நீக்க முடியவில்லை என்றால், உடனடியாக அந்த செயலியின் ஹெல்ப் டெஸ்கிற்கு சென்று வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு, பின்னர் அவர்கள் சொல்லும் அறிவுறுத்தலின்படி தனிப்பட்ட தகவல்களை எல்லாம் நீக்குங்கள்.
- வேறு யாருடனும் என்னுடைய தகவல் பகிரப்படாது என்பதற்கான உறுதிச் சான்றை எழுத்துப்பூர்வமாக கேட்டுப் பெறுங்கள். ஒருவேளை உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டால் இந்த உறுதிச் சான்று வழக்கு சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு உதவியாக இருக்கும்.
நீங்கள் தவிர்க்க வேண்டிய செயலிகள்
சில செயலிகள் ஆபத்தானவை என அரசாங்கத்தால் எச்சரிக்கப்பட்டிருக்கும். அத்தகைய செயலிகள் எவை என தெரிந்து கொண்டு அவற்றை ஒருபோதும் பதிவிறக்கம் செய்யாதீர்கள். பெரும்பாலும் அத்தகைய செயலிகளை உங்களின் பாதுகாப்பு மற்றும் பிரைவசி பாலிசியை குறிவைத்து உருவாக்கப்பட்டவையாக இருக்கும். அத்தகைய செயலிகளை இன்ஸ்டால் செய்யும்போது, புகைப்படங்கள், பைல்கள், கேமரா, மைக்ரோஃபோன் மற்றும் பல அம்சங்களை அணுக அனுமதி கேட்கும். அப்படியான அனுமதி கொடுத்தால் மட்டுமே செயலியை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்ய முடியும் வகையில் வடிவமைக்கப்படிருக்கும். அத்தகைய செயலிகள் ஆபத்தானவை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ