அகமதாபாத் மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புக்கு 15L பரிசு!

அகமதாபாத் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த கையடக்க வாகனத்திற்கு இன்போசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட Aarohan Social Innovation Awards-ல் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. 

Last Updated : Feb 28, 2019, 04:00 PM IST
அகமதாபாத் மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புக்கு 15L பரிசு! title=

அகமதாபாத் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த கையடக்க வாகனத்திற்கு இன்போசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட Aarohan Social Innovation Awards-ல் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. 

Handicare என அழைக்கப்படும் இந்த இயங்குநிலை சாதனம், குறைந்த தொடை-இயலாமை கொண்டவர்களுக்கு தரையில் நகர்ந்து பயணிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் பொறியியல் கல்லூரியை சேரந்த இரண்டு மாணவர்கள் சுமத் முடாலியர் மற்றும் விஷ்ருபாட், தங்களது முதல்கட்ட துவக்கமாக இந்த Handicare இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.

"இந்த சாதனம் குறிப்பாக வீட்டு உள்பகுதிகளில் பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது" என தயாரிப்பாளர் சுமத் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டினுன் சக்கர நாற்காளியை பயன்படுத்த இயலாத பகுதிகளிலும் இந்து சாதனத்தை பயன்படுத்தலாம், அதே நேரத்தில் வெளிப்புறத்தில் குறைந்த தூர பயணத்திற்கும் இந்த சாதனத்தை பயன்படுத்தலாம் என சுமத் தெரிவித்துள்ளார்.

குறைந்த மூட்டு-இயலாமை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு இந்த சாதனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.  பயனர் விரும்பும் திசையில் செல்வதற்கு ஏதுவாக ஸ்டியேரிங்க் பொருத்தப்பட்டுள்ளதால் சவுகரியமான பயணத்தை இந்த Handicare-ல் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Handicare-கான முன்மாதிரியை இருவரும் தங்களது டிப்ளமோ படிப்பின் போது உருவாக்கியுள்ளனர். இந்த முன்மாதிரியானது இதுவரை 2,300 ரூபாய் விலையில் சுமார் 300 அளவில் விற்பனையாகியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்... "எங்கள் டிப்ளமோ படிப்பின்போது செயல்திறன் பயிற்சிக்காக Apang Manav-வில் இணைந்தோம். இந்த தொடர்பின் மூலம் எங்களது Handicar-னை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கினோம். " என தெரிவித்தனர்.

இந்த சாதனம் ஆனது மரம், உலோகம் மற்றும் நைலான் சக்கரங்கள்  கொண்டு தயாரிக்கப்படுகிறது. தற்போது  LJ பொறியியல் கல்லூரியில் முதுகலை இயந்திர பொறியியல் பயின்று வரும் இரு மாணவர்களும் தங்களது இறுதி செமஸ்டர் பயிற்சிக்காக இந்த சாதனத்தை தற்போது முழுமை படுத்தியுள்ளனர்.

முன்னதாக இந்த இரு மாணவர்களும் தங்களது படைப்பிற்காக மாநில அரசிடம் இருந்து ரூ 10 லட்சம் நிதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending News