ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு

பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. 

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Jul 8, 2019, 04:54 PM IST
ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு
File photo

இந்தியாவை பொருத்த வரை தொலை தொடர்பு துறையில் போட்டிகள் அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக ப்ரீபெய்ட் மொபைல் இணைப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கிறது. தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் டெலிகாம் நிறுவனங்கள் தினத்தோறும் புதிய சலுகைகளை போட்டி போட்டுக்கொண்டு அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. தற்போது, ஏர்டெல் ரூ.148 விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெலின் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரம்:-

28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிட்டெட் வாய்ஸ்  கால் உள்ளிட்டவை ரூ.148 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ்ஸுடன், ஏர்டெல் டிவி ஆப் மற்றும் மியூசிக் சேவையை இயக்குவதற்கான வசதியும் கிடைக்கும். ஏர்டெல் டி.வி. செயலி மூலம் நேரலை சேன்னல்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் காணலாம்.