அசத்தும் அமேசான்: ரூ.17,000 ரெட்மி போனை வெறும் ரூ. 749-க்கு வாங்க அரிய வாய்ப்பு

Amazon Summer Sale: ரெட்மி நோட் 10டி 5ஜியில் பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த அசத்தலான போனை அமேசான் சேலில் 700 ரூபாய்க்கு வாங்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 4, 2022, 11:53 AM IST
  • அமேசான் கோடைகால விற்பனை 2022 துவங்கிவிட்டது.
  • ரெட்மி போனில் அசத்தலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • வெறும் 749 ரூபாய்க்கு அசத்தலான ரெட்மி போனை வாங்கலாம்.
அசத்தும் அமேசான்: ரூ.17,000 ரெட்மி போனை வெறும் ரூ. 749-க்கு வாங்க அரிய வாய்ப்பு title=

அமேசான் சம்மர் சேல்: அமேசான் கோடைகால விற்பனை 2022 (அமேசான் சம்மர் சேல் 2022) மே 4, 2022 முதல் தொடங்கியுள்ளது. இந்த அமேசான் சம்மர் சேலில் எலக்ட்ரானிக்ஸ் முதல் ஃபேஷன் உடைகள் வரை, சாதனங்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை, மடிக்கணினிகள் முதல் டேப்லெட்கள் வரை, தொலைக்காட்சிகள் முதல் சுகாதார சாதனங்கள் வரை பல்வேறு வகையான சாதனங்களுக்கு 70% வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன. 

இதனுடன், இந்த அமேசான் கோடைகால விற்பனை 2022 இன் போது பல புதிய பொருட்களும் அறிமுகம் ஆகவுள்ளன. நீங்கள் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த விற்பனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ரெட்மி நோட் 10டி 5ஜி போனை இந்த சேலில் மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். ரூ.16,999 விலையுள்ள போனை வெறும் ரூ.749க்கு வாங்குவதற்கான வழிகளை இந்த பதிவில் காணலாம். 

அமேசான் சம்மர் சேல்: ரெட்மி நோட் 10டி 5ஜி, சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

ரெட்மி நோட் 10டி 5ஜி-இன் அறிமுக விலை ரூ. 16,999 ஆகும். எனினும் அமேசான் விற்பனையில் இந்த போன் ரூ.13,999க்கு கிடைக்கிறது. தொலைபேசியில் 3000 ரூபாய் முழு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் இதில் உள்ளன. இவற்றின் காரணமாக தொலைபேசியின் விலை கணிசமாகக் குறையும்.

மேலும் படிக்க | பிளிப்கார்டில் அதிரடி தள்ளுபடி: 43 இஞ்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.5,000-க்கு விற்பனை 

அமேசான் சம்மர் சேல்: ரெட்மி நோட் 10டி 5ஜி, எக்ஸ்சேஞ்ச் சலுகை

ரெட்மி நோட் 10டி 5ஜி-யில் ரூ.12,250 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் இந்த தள்ளுபடியை பெறலாம். எனினும், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் ரூ.12,250 தள்ளுபடி கிடைக்கும். இந்த விற்பனையில் கிடைக்கும் அனைத்து தள்ளுபடிகளையும் பெற முடிந்தால், அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போனின் விலை ரூ.749 ஆக குறைந்துவிடும். 

அமேசான் சம்மர் சேல்: ரெட்மி நோட் 10டி 5ஜி, வங்கி சலுகைகள்

வாடிக்கையாளர்களுக்கு தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்ற விருப்பமில்லை என்றால், இந்த விற்பனையில் கிடைக்கும் வங்கிச் சலுகை மற்றும் கூப்பனையும் பயன்படுத்திக்கொள்ளலாம். போனில் ரூ.1750 கூப்பன் கிடைக்கிறது. இந்த கூப்பனை பயன்படுத்திய பிறகு, போனின் விலை ரூ.12,249 ஆக குறையும். 

அதன் பிறகு இந்த விற்பனையில் வங்கி சலுகையும் உண்டு. நீங்கள் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதன் பிறகு போனின் விலை ரூ.11,249 ஆக குறையும். 

மேலும் படிக்க | வெறும் ரூ1949க்கு இந்த போக்கோ போனை வாங்க அரிய வாய்ப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News