Amazon Fab Phones Fest: 40% தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை

அமேசான் ஆன்லைன் தளத்தில் 40 விழுக்காடு தள்ளுபடியில் அனைத்து கம்பெனிகளின் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 29, 2022, 01:08 PM IST
  • அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்
  • 40% வரை போன்களுக்கு சலுகைகள் அறிவிப்பு
  • ஆப்பிள் முதல் சாம்சங்க் வரை தள்ளுபடி விலை
Amazon Fab Phones Fest: 40% தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை title=

Amazon Fab Phones Fest; இ-காமர்ஸ் தளமான அமேசானில் செவ்வாய் முதல்  Fab Phones Fest விற்பனையை தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விற்பனையில் பல ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் மற்றும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சம் 40 விழுக்காடு வரையிலான ஆஃபர்கள் இந்த விற்பனையில் கொடுக்கப்பட இருக்கின்றன. அமேசான் நிறுவனத்தின் பேப் போன் பெஸ்ட் விற்பனையின் அறிவிப்புப்படி, Tecno, Xiaomi, Samsung, Apple, Realme மற்றும் iQOO போன்ற சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் 40 சதவீதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க | ஷாரூக்கான் பயன்படுத்தும் போன் இதுதான் - இத்தனை அம்சங்களா?

ஜூன் 30 ஆம் தேதி வரை Fab Phones Fest விற்பனை இருக்கும். கூடுதலாக, SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். அவர்கள் தங்களுக்குப் பிடித்த ஸ்மார்ட்போன்களில் 12 மாதங்கள் வரை அற்புதமான எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் நோ-காஸ்ட் EMI ஆகியவற்றைப் பெறலாம். பிரைம் உறுப்பினர்கள் அட்வான்டேஜ் ஜஸ்ட் ஃபார் பிரைமுடன் ரூ. 20,000 வரை சேமிக்கலாம். இதில் 6 மாத இலவச ஸ்கிரீன் ரீப்ளேஸ்மென்ட் மற்றும் கூடுதலாக மூன்று மாதங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ போன்ற ஹெச்டிஎஃப்சி பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் அதிக EMI தவணைகளை கொடுக்கப்படுகிறது.

 Amazon.in-ல் விற்பனையாளர்களிடமிருந்து சலுகைகளுடன் கூடிய சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு இறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, Apple வாடிக்கையாளர்கள் iPhone 13 ஸ்மார்ட்போனை ரூ. 79,900 முதல் பெறலாம். கூடுதலாக SBI கிரெடிட் கார்டுகளுடன் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம் என்று Amazon India தெரிவித்துள்ளது.இதேபோல், சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கும், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Samsung Galaxy M12 ரூ.9,499-க்கு கிடைக்கிறது.

மேலும் படிக்க | Used Cars: நம்ப முடியாத விலையில் செகண்ட் ஹேண்ட் கார்களின் விற்பனை, முந்துங்கள்

Samsung Galaxy S20 FE 5G ரூ.34,990-க்கு கிடைக்கிறது. Samsung M32, Samsung M33 5G மற்றும் Samsung Galaxy M53 5G ஆகியவை முறையே ரூ.14,999, ரூ.17,999 மற்றும் ரூ.26,499-க்கு கிடைக்கிறது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட iQOO Neo 6 5G ஸ்மார்ட்போனை ரூ.29,999 முதல் பெறலாம். iQOO Z5 5G மற்றும் iQOO Z6 5G ஆகியவை ரூ.23,990 மற்றும் ரூ.13,999 முதல் கிடைக்கும். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News