Airtel Rs 349 prepaid plan: இந்தியாவில் அதிக ப்ரீபெய்ட் பயனர்களை ஈர்க்கும் முயற்சியில், தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அற்புதமான சலுகைகளுடன் கொண்டு வந்துள்ளது. ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இப்போது அமேசான் பிரைம் நன்மைகளை அனுபவிக்க முடியும். இதில் அபாரமான ஷாப்பிங் அனுபவம், அற்புதமான வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் விளம்பரங்கள் இல்லாத இசைக்கான நன்மைகள் ஆகியவை வெறும் ரூ. 349 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மூலம் கிடைக்கும்.
ஏர்டெல்லின் (Airtel) இந்த பேக் மூலம் நீங்கள் 28 நாட்கள் வரம்பற்ற உள்ளூர், தேசிய மற்றும் ரோமிங் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி தரவு, நாள் ஒன்றுக்கு 4 ஜி தரவு, 100 எஸ்எம்எஸ் வசதி மற்றும் அமேசான் பிரைம் உறுப்பினர் அந்தஸ்து ஆகியவற்றைப் பெறலாம். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளில் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹலோ ட்யூன்கள், விங்க் மியூசிக், அப்பல்லோ 24 | 7 வட்டம், ஃபாஸ்டாக்கில் ரூ .100 கேஷ்பேக் மற்றும் இலவச ஆன்லைன் படிப்புகள் ஆகியவை அடங்கும்.
அமேசான் பே (Amazon Pay), ஏர்டெல் தேங்க்ஸ் (முன்பு மைஏர்டெல்) செயலி, ஏர்டெல்.இன் போன்ற அனைத்து ஆன்லைன் சேனல்களிலும் அல்லது அருகிலுள்ள ஏர்டெல் சில்லறை வியாபார கடைகளிலும் வாடிக்கையாளர்கள் இந்த பேக்கை வாங்கலாம். வாடிக்கையாளர்கள் முதல் முறையாக பேக்கை வாங்கிய பிறகு, இந்த செயல்முறைகளைப் பின்பற்றி அமேசான் பிரைம் உறுப்பினர் ஆகலாம்:
- இந்த பேக்கை வாங்கிய சில நிமிடங்களில், ஏர்டெல்லிலிருந்து உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும். அவர்களது AirtelThanks செயலியை பதிவிறக்கம் செய்து அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பை ஆக்டிவேட் செய்ய அது உதவும். செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, உங்கள் ஹோம் பேஜில் உங்கள் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பை ஆக்டிவேட் செய்ய ஒரு நினைவூட்டல் அட்டையைக் (Reminder Card) காண்பீர்கள்.
ALSO READ: Airtel recharge: ஏர்டெல் ரூ.456 புதிய திட்டம் அறிமுகம்: என்னென்ன நன்மைகள்
- இந்த பேனரில் கிளிக் செய்தவுடன், நீங்கள் AirtelThanks நன்மைகள் பக்கத்திற்கு அழைத்துச்செல்லப் படுவீர்கள். உங்களிடம் ஏற்கனவே இந்த செயலி இருந்தால், நீங்கள் ரூ.349 ப்ரீபெய்ட் பேக்கை வாங்கியவுடன் நேரடியாக AirtelThanks பெனிஃபிட்ஸ் பக்கத்திற்கு செல்லலாம்.
- AirtelThanks செயலி மூலம் நீங்கள் ரீசார்ஜ் செய்தால், உங்கள் ரீசார்ஜ் சக்சஸ் பேஜிலிருந்து நேரடியாக AirtelThanks நன்மைகள் பக்கத்திற்கு சென்று உங்கள் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பை ஆக்டிவேட் செய்யலாம். AirtelThanks பக்கத்திற்கு வந்தவுடன், 'அமேசான் ப்ரைம்' கார்டில் கிளிக் செய்து உங்கள் செயல்பாட்டு பயணத்தைத் தொடக்கலாம்.
- அடுத்த ஸ்கிரீனில் உள்ள 'ஆக்டிவேட் நவ்'-ல் கிளிக் செய்யவும், இதில் சலுகையின் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் விவரமாக காணலாம். இதன் பிறகு சைன் அப் / சைன் இன் செய்ய அமேசான் தளத்துக்கு அனுப்பப்படுவீர்கள்.
-நீங்கள் ஏற்கனவே அமேசான் வாடிக்கையாளராக இருந்தால், அமேசான் பிரைம் சந்தாவைத் தொடங்க உங்கள் அமேசான் யூசர் ஐ.டி. மற்றும் பாஸ்வர்டை உள்ளிட்டு சைன் இன் செய்யவும். பிறகு அமேசான் ப்ரைம் சந்தாவை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களிடம் ஏற்கனவே அமேசான் (Amazon) கணக்கு இல்லாத நிலையில் புதிய கணக்கை உருவாக்கிக்கொள்ளவும்.
இது தவிர, ஏர்டெல் ரூ .299 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை 30 நாட்களுக்கு அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தில் 30ஜிபி தரவு, 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன.
ALSO READ: Airtel அசத்தும் திட்டத்தால் Jio-வுக்கு போட்டி: வரம்பில்லாமல் தரவை பயன்படுத்தலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR