Airtel recharge: ஏர்டெல் ரூ.456 புதிய திட்டம் அறிமுகம்: என்னென்ன நன்மைகள்

ஏர்டெலின் ரூ.456 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 22, 2021, 02:29 PM IST
Airtel recharge: ஏர்டெல் ரூ.456 புதிய திட்டம் அறிமுகம்: என்னென்ன நன்மைகள் title=

கொரோனா காலத்தில், நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான மலிவான திட்டங்களை சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன. இந்த திட்டங்களில், DATA முதல் தொடங்கி காலிங்க, மெசேஜ் என பல வகையான நன்மைகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. 

ஏர்டெல் ரூ.456 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் (Airtel Prepaid Plans) புதிதாக வெளியிட்டுள்ள ரூ.456 ப்ரீபெய்ட் திட்டத்தில் 60 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் மொத்தமாக 50 ஜிபி டேட்டா நன்மையைத் தினசரி வரம்பு இல்லாமல் வழங்குகிறது. No Daily Limit வசதியுடன் இந்த திட்டம் வெளிவந்துள்ளதால் இந்த திட்டத்தை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | Airtel அசத்தும் திட்டத்தால் Jio-வுக்கு போட்டி: வரம்பில்லாமல் தரவை பயன்படுத்தலாம்

ஏர்டெலின் ரூ.456 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு இலவச நன்மைகள் கிடைக்கும். 

இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹெலோட்டூன்ஸ், விங்க் மியூசிக், ஷா அகாடமியில் ஒரு வருடத்திற்கு இலவச கோர்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மற்றும் ரூ.100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் உள்ளிட்ட ஏர்டெல் தேங்க்ஸ் சலுகைகளையும் நிறுவனம் வழங்குகிறது. மேலும் இதில் அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் பதிப்பின் ஒரு மாத இலவச சோதனையையும் பயனர்கள் பெறுகிறார்கள்.

ALSO READ | Jio Vs Vi Vs Airtel: 4G வேகத்தில் யார் பெஸ்ட்; TRAI கூறுவது என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News