iPhone 12-ல் சலுகை மழை: பிளிப்கார்ட் சேலில் நம்ப முடியாத தள்ளுபடிகள்

Flipkart Electronics Sale: இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சேலில், மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவாக கிடைக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 14, 2022, 03:37 PM IST
  • பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை நடந்து வருகிறது.
  • இந்த விற்பனை இன்று முதல், அதாவது ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • இந்த சேலில், மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவாக கிடைக்கின்றன.
iPhone 12-ல் சலுகை மழை: பிளிப்கார்ட் சேலில் நம்ப முடியாத தள்ளுபடிகள் title=

பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை: பிளிப்கார்ட்டில் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை (எலக்ட்ரானிக்ஸ் சேல்) நடந்து வருகிறது. இந்த விற்பனை இன்று முதல், அதாவது ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சேலில், மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவாக கிடைக்கின்றன. 

நீங்கள் ஐபோன் ரசிகராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுவரை இல்லாத அளவுக்கு ஐபோன் 12-ல் மிகப்பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. நம்ப முடியாத வகையில் போனுக்கு 27 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | BRATA Trojan Malware: எச்சரிக்கை! உங்கள் வங்கிக் கணக்கை நொடிப்பொழுதில் காலி செய்யும் 

பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை: ஐபோன் 12 சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

ஐபோன் 12 (64ஜிபி) இன் வெளியீட்டு விலை ரூ.65,900 ஆகும். ஆனால் பிளிப்கார்ட் விற்பனையில் இந்த போன் ரூ.51,999-க்கு கிடைக்கிறது. இந்த போனுக்கு ரூ.13,901 தள்ளுபடி வழங்கப்படுகிறது. தொலைபேசியில் பல வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகள் கிடைக்கின்றன. இதன் காரணமாக தொலைபேசியின் விலை கணிசமாகக் குறையும்.

பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை: ஐபோன் 12 வங்கி சலுகை

ஐபோன் 12 ஐ வாங்க எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு ரூ.750 தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.51,249 ஆக குறையும். அதன் பிறகு இந்த சேலில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகை, அதாவது பரிமாற்ற சலுகையும் உள்ளது. 

பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை: ஐபோன் 12 பரிமாற்ற சலுகை

ஐபோன் 12 இல் ரூ.12,500 பரிமாற்ற சலுகை உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் பரிமாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பெற முடியும். ஆனால், இந்த சலுகையை பெற, உங்கள் பழைய போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்களுக்கு ரூ.12,500 தள்ளுபடி கிடைக்கும். போனில் கிடைக்கும் அனைத்து தள்ளுபடிகளையும் ஒருவர் முழுமையாகப் பெற முடிந்தால், போனின் விலை ரூ.38,749 ஆக குறையும். 

மேலும் படிக்க | கூகுள் பே-வில் UPI ஐடியை மாற்றுவது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News