Amazon Great Summer Sale: வெறும் ரூ.128 செலுத்தி iPhone 14 வாங்குவது எப்படி? ரகசியம் இங்கே

Amazon Great Summer Sale: அமேசானின் கிரேட் சம்மர் சேல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஐபோன் 14 மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 5, 2023, 06:29 AM IST
  • அமேசான் கிரேட் சம்மர் சேல் .
  • நினைத்து பார்க்க முடியாத விலையில் ஐபோன் 14.
  • சேலின் முழு விவரத்தை இங்கே காணலாம்.
Amazon Great Summer Sale: வெறும் ரூ.128 செலுத்தி iPhone 14 வாங்குவது எப்படி? ரகசியம் இங்கே title=

Amazon Great Summer Sale: ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசானின் கிரேட் சம்மர் சேல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஐபோன் 14 மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. முதல் முறையாக சமீபத்திய ஐபோன்களில் இவ்வளவு பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. அமேசானில் கிடைக்கும் இந்த சலுகைகளின் மூலம், ஐபோனை 40 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் வாங்கலாம். இது தவிர, இதை வாங்க இஎம்ஐ விருப்பமும் உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, நாள் ஒன்றுக்கு ரூ. 128 செலுத்தி ஐபோன் 14 ஐ வாங்கிச்செல்லலாம். இந்த அட்டகாசமான போனை இத்தனை குறைந்த விலையில் எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம். 

iPhone 14: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

ஆப்பிள் ஸ்டோரில் ஐபோன் 14 -இன் எம்ஆர்பி ரூ. 79,900 ஆகும். அதே சமயம் அமேசானில் இது 66,999 ரூபாய்க்கு 16% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. கூடுதலாக, அமேசானில் வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி மற்றும் அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் வங்கி தள்ளுபடியையும் பெற முடியும். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.7,706 ஆக இருக்கும். 

எக்ஸ்சேஞ் சலுகை:

வங்கிச் சலுகை மட்டுமின்றி அமேசானில் சுமார் ரூ.20,000 மதிப்பிலான பரிமாற்ற சலுகையும் அதாவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கிடைக்கிறது. அதன் பிறகு போனின் விலை ரூ.39,293 ஆக குறையும்.

iPhone 14: இஎம்ஐ ஆப்ஷன்கள்

உங்கள் பட்ஜெட் இதை விட குறைவாக இருந்து, ஆனால் ஐபோன் 14 -ஐ வாங்க வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு இருந்தால், உங்களுக்காகவே இதில் இஎம்ஐ ஆப்ஷனும் உள்ளது. வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு ரூ.128 செலுத்தி ஐபோன் 14ஐ வாங்கலாம். இதில் நோ காஸ்ட் இஎம்ஐ -யும் கிடைக்கிறது. அதாவது போனுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை.

மேலும் படிக்க | அமேசான் பம்பர் ஆஃபர்... ரூ.10 ஆயிரம் தள்ளுபடியில் OnePlus 10R 5G போன் விற்பனை..! 

மே 2023 இல் ஐபோன் 14 இன் விலை ரூ. 63,999 ஆகக் குறையும் என்று ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட் கூறியுள்ளது. நீங்கள் சரியான நேரத்தில் வாங்கினால், ரூ. 59,000 க்கு ஐபோன் 14 ஐ வாங்கலாம் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. இது தவிர, ஐ போனின் மற்ற சேமிப்பக விருப்பங்களின் விலைகளும் குறையும் என கூறப்படுகின்றது. 

அமேசான் சேலில் கிடைக்கும் பிற தள்ளுபடிகள்:

லாவா பிளேஸ் 5 ஜி: லாவா பிளேஸ் 5-ஜியின் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பக மாறுபாட்டின் எம்ஆர்பி ரூ.14,999 ஆகும். இருப்பினும் இது 30 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு ரூ.10,499-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ அல்லது கோடக் வங்கியின் கிரெடிட் கார்டு கட்டணங்களில் 10% தள்ளுபடி (ரூ. 1,000 வரை)  வங்கிச் சலுகைகளில் அடங்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.9,950 வரை சேமிக்க முடியும், அதன் பிறகு வெறும் ரூ.549 என்ற விலைக்கு மொபைலை வாங்கலாம்.

Samsung Galaxy M13 5G:  Samsung Galaxy M13 5G (4GB RAM/64GB) அமேசான் கிரேட் சம்மர் சேல் 2023-ல் 32 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு ரூ. 11,499-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் MRP ரூ. 16,999 ஆகும். வங்கிச் சலுகைகளில் ஐசிஐசிஐ அல்லது கோடக் வங்கியின் கிரெடிட் கார்டு கட்டணங்களில் 10 சதவீதம் (ரூ. 1,000 வரை) தள்ளுபடி அடங்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் பழைய போனை எக்சேஞ்சாக கொடுப்பதன் மூலம் ரூ.10,800 வரை சேமிக்கலாம், அதன் பிறகு விலை ரூ.699 ஆக குறையும்.

மேலும் படிக்க | வெறும் ரூ. 549 -க்கு அசத்தல் Realme ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட் அதிரடி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News