iPhone 12 Mini-ல் கிடைக்கிறது ரூ. 25,000 தள்ளுபடி: அசத்தும் Flipkart விற்பனை

Flipkart Sale: பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் விற்பனை நடந்து வருகிறது. அதில் அனைத்து பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கும் அதிகப்படியான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 1, 2022, 11:58 AM IST
  • பிளிப்கார்டில் மந்த் எண்ட் மொபைல் ஃபெஸ்ட் நடந்துவருகிறது.
  • ஐபோன் 12 மினியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான தள்ளுபடி கிடைக்கிறது.
  • இன்று விற்பனையின் கடைசி நாள்.
 iPhone 12 Mini-ல் கிடைக்கிறது ரூ. 25,000 தள்ளுபடி: அசத்தும் Flipkart விற்பனை title=

பிளிப்கார்டில் மாத இறுதி மொபைல் சிறப்பு விற்பனையான மந்த் எண்ட் மொபைல் ஃபெஸ்ட் நடந்து வருகிறது. அதில் அனைத்து பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கும் அதிகப்படியான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 

இந்த விற்பனையின் கடைசி நாளான இன்று ஐபோன் 12 மினியில் கிடைக்கும் சலுகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த விற்பனையில் ஆப்பிள் ஸ்மார்ட்போனில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தள்ளுபடி கிடைக்கும்.

iPhone 12 Mini-ல் மிகப்பெரிய தள்ளுபடி

ரூ.74,900 விலை கொண்ட ஐபோன் 12 மினி, பிளிப்கார்ட் விற்பனையில் கிடைக்கும் 13% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.64,999க்கு விற்கப்படுகிறது. ஐடிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்ட் கொண்டு இந்த போனை வாங்கினால், ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் போனின் விலை ரூ.63,999 ஆகக்குறையும். 

இந்த வகையில் ரூ. 25 ஆயிரத்துக்கு மேல் தள்ளுபடி கிடைக்கும்

ஐபோன் 12 மினியில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தள்ளுபடி பெற, டீலில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்த வேண்டும். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ், உங்கள் பழைய ஸ்மார்ட்போனிற்கு ஈடாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.14,800 வரை சேமிக்க முடியும். 

மேலும் படிக்க | வெறும் 451 ரூபாய்க்கு மோட்டோரோலா போனை வாங்க இன்றே கடைசி நாள் 

வாடிக்கையாளர்கள் இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெற்றால், இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.49,199க்கு வாங்கலாம். அதாவது, ஐபோன் 12 மினிக்கு இந்த டீலில் ஒட்டுமொத்தமாக ரூ.25,701 தள்ளுபடி கிடைக்கும்.

ஐபோன் 12 மினியின் அம்சங்கள்

பிளிப்கார்டின் இந்த விற்பனையில், ஐபோன் 12 மினியின் 256 ஜிபி மாறுபாட்டில் இந்த சலுகைகள் கிடைக்கின்றன. இந்த போனில் 5.4 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே கிடைக்கும். இந்த 5G ஸ்மார்ட்போன் A14 பயோனிக் சிப்பில் வேலை செய்கிறது. 

இதில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு கிடைக்கும். இதன் இரு சென்சார்களும் 12 எம்பி சென்சார்களாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவும் 12எம்பி கொண்டது. இந்த வலுவான பேட்டரி டூயல் சிம் ஸ்மார்ட்போன் தண்ணீர் மற்றும் தூசியிலும் பாதிக்கப்படாமல் உறுதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Truecaller - ன் இந்த அம்சத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எப்படி சாத்தியம்? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News