ChatGPT: ஆப்பிள் வாட்சில் சாட்ஜிபிடி..! வாட்ஸ்அப் முதல் வாய்ஸ் கால் வரை செய்யலாம்

சாட்ஜிபிடி இப்போது ஆப்பிள் வாட்சிலும் இடம்பிடித்திருக்கிறது. இதன் மூலம் இந்த வாட்சில் இருந்து வாட்ஸ்அப் முதல் வாய்ஸ் கால் வரை நீங்கள் முன்பைவிட மிகவும் எளிமையாக மேற்கொள்ளலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2023, 03:43 PM IST
ChatGPT: ஆப்பிள் வாட்சில் சாட்ஜிபிடி..! வாட்ஸ்அப் முதல் வாய்ஸ் கால் வரை செய்யலாம் title=

சாட்ஜிபிடியின் வருகை டெக் உலகை தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கிறது. எவையெல்லாம் சாத்தியமில்லாதவை என நினைத்தார்களோ அதையெல்லாம் நொடியில் சாத்தியப்படுத்தி பிரம்மிக்க வைக்கிறது சாட்ஜிபிடி. ஐடி துறை உள்ளிட்ட பல துறைகளில் சாட்ஜிபிடியின் வருகை ஒரு அச்சத்தை உருவாக்கியுள்ளது. பல கோடி பேரின் வேலை வாய்ப்புகளையும் விரைவில் காலி செய்யப்போகிறது என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. நீதிபதிகளுக்கு பதிலாக தீர்ப்பை எழுதுவது முதல் ஆசிரியர்களின் வேலையை முழுமையாக காலி செய்வது வரை என எல்லாம் சாட்ஜிபிடியால் சாத்தியம். 

இதுமட்டுமல்லாமல் மருத்துவர்களுக்கு பதிலாக சரியான ஆரோக்கிய டிப்ஸையும், மருந்து பரிந்துரைகளையும் சாட்ஜிபிடியால் வழங்க முடியும். சிக்கலான பிரச்சனைகளுக்கு உலகின் சிறந்த நிபுணர்களின் பதிலை வெகுவிரைவில் உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் சாட்ஜிபிடியில் இருக்கின்றன. அத்தகைய சாட்ஜிபிடி தொழில்நுட்பம் இப்போது ஆப்பிள் வாட்சில் இடம்பிடித்திருக்கிறது. ஏற்கனவே ஹெல்த் தொடர்பான அத்தனை அம்சங்களையும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகளால் கொடுக்க முடியும் என்ற சூழல் இருக்கும்போது சாட்ஜிபிடியும் இப்போது இணைந்திருப்பதால், நினைத்து பார்க்கமுடியாத சாத்தியக்கூறுகளையெல்லாம் இனி கை மணிக்கட்டில் சாத்தியப்படுத்தலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. 

மேலும் படிக்க | ரொம்ப கம்மி விலையில் 65 நாட்களுக்கு அசத்தல் BSNL திட்டம்

வாடிக்கையாளர்கள் தங்கள் கைகளில் இருக்கும் ஆப்பிள் வாட்சிலிருந்து சாட், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பயன்பாட்டைப் மிக மிக எளிதாக மேற்கொள்ளலாம். இதற்கு WatchGPT உதவியாக இருக்கும். ஆப் ஸ்டோரில் உள்ள இந்த சாப்ட்வேரின் விளக்கம், அதை எவ்வளவு எளிமையானது? மற்றும் ஆப்பிள் வாட்சுடன் எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது? என்பதை வெளிக்காட்டுகிறது. யூசர்கள் இப்போது WatchGPT மூலம் தங்கள் மணிக்கட்டில் இருந்து சாட் செய்யலாம். வாய்ஸ் கால், வாட்ஸ்அப் மெசேஜ், இமெயில் அனுப்புதல் ஆகியவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம்.

வாட்ச்ஜிபிடியை உருவாக்கியவர் ஹிட் வான் டெர் ப்ளோக். ட்விட்டரில், இந்த மென்பொருளை இப்போது இந்தியா உட்பட ஆப் ஸ்டோரில் அணுக முடியும் என அவர் அறிவித்துள்ளார். தங்கள் வாட்ச் ஸ்கிரீனில் இருந்து, பயனர்கள் ChatGPT உடன் தொடர்பு கொள்ளவும். SMS உடன் மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் பதில்களைப் பகிரவும் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இதற்கு iOS 13.0 அல்லது அதற்குப் பிறகு இயங்கும் ஸ்மார்ட்போன்கள் தேவை.

9to5Mac-ன் அறிக்கையின்படி, ஆப்பிள் வாட்ச் உரிமையாளர்கள் இப்போது எதையும் தட்டச்சு செய்யாமல் விரைவான பதில்களுக்கு கூடுதலாக நீண்ட-உருவாக்கப்பட்ட செய்திகளைப் பெறலாம். ஆப்பிள் ஆப் ஸ்டோர் வாட்ச்ஜிபிடி பயன்பாட்டை ஆங்கிலம், டச்சு, பிரஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் பதிவிறக்கம் செய்ய வழங்குகிறது. மேலும், தனிப்பட்ட API விசையைப் பயன்படுத்துவதற்கான தேர்வு, அணுகல் வரலாறு மற்றும் குரல் உள்ளீட்டைக் கடைப்பிடிக்கும் நிலையான திறன் போன்ற பயன்பாட்டிற்கான திட்டமிட்ட மேம்பாடுகளை WatchGPT உருவாக்கியவர் தெளிவுபடுத்தியுள்ளார். பயனர் அனுபவத்தை மேம்படுத்த, ஆப்ஸ் மூலம் பதில்களை வாய்ஸ் மூலம் படிக்கவும் இந்த ஆப்ஸ் உதவும்.

மேலும் படிக்க | எலான் மஸ்க் சொல்வதில் நியாயம் இருக்கு: சாட்ஜிபிடி இணை நிறுவனர் ஒப்புதல்

மேலும் படிக்க | ChatGPT அறிமுகப்படுத்தியிருக்கும் API: ஆன்லைன் ஷாப்பிங்கில் விரைவில் புதிய புரட்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News