உலக அரக்கில் சென்னை மாணவர்களுக்கு கிடைத்த பெருமை!

சென்னை மாணவர்களின் முயற்சியில் உறுவாக்கப்பட்ட செயற்கைக்கேளை வரும் ஆகஸ்ட் மாதல் நாசா விண்ணின் ஏவுகிறது!

Last Updated : Jul 13, 2018, 11:06 PM IST
உலக அரக்கில் சென்னை மாணவர்களுக்கு கிடைத்த பெருமை! title=

சென்னை மாணவர்களின் முயற்சியில் உறுவாக்கப்பட்ட செயற்கைக்கேளை வரும் ஆகஸ்ட் மாதல் நாசா விண்ணின் ஏவுகிறது!

உலகிலேயே மிகவும் குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோளினை (ஜெய்ஹிந்த்S1) சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஹிந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். 

கேளம்பாக்கம் ஹிந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரியில் ஏரோஸ்பேஸ் பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் ஹரிகிருஷ்ணன், அமர்நாத் கிரிபிரசாத் மற்றும் சுதி. இந்த மாணவர்கள் குழு கல்லூரி ப்ராஜக்டிற்காக 33.39 கிராம் எடை கொண்ட ஜெய்ஹிந்த் S1 என்னும் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர்.

இந்த செயற்கைகோளினை முழுமையாக அமைப்பு படத்து 2 வாரங்கள் தேவைப்பட்டதாக குழுவின் உறுப்பினர் சுதி தெரிவித்துள்ளார்.

ரூ.15,000 செலவில் முழுக்க முழுக்க நைலானை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் ஆனது வானிலை நிலவரங்களை அறிவதற்கு பயன்பட உள்ளது. 

இந்த செயற்கைக்கோள் ஆனது நாசா நடத்தும் குயூப்ஸ் இன் ஸ்பேஸ் போட்டியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் பலூன் மூலம் இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்ந நாசா திட்டமிட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக 64 கிராம் எடை கொண்ட செயற்கைக் கோளே குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோளாக கருதப்பட்டது. இந்த சாதனை முறியடிக்கும் வகையில் தற்போது சென்னை மாணவர்க 33.39 கிராமில் செயற்கோள் உறுவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News