வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... பாஸ்டேக் புதிய விதிகள் குறித்த விபரங்கள் இதோ..!

New FASTag Rules: FASTag-க்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகன விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2024, 02:17 PM IST
  • ஃபாஸ்டாக் தொடர்பாக, புதிய விதிகளை NPCI செயல்படுத்தியுள்ளது.
  • FASTag உடன் வாகன விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • FASTag KYC நடைமுறைக்கு தேவையான ஆவணங்கள்.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... பாஸ்டேக் புதிய விதிகள் குறித்த விபரங்கள் இதோ..! title=

New FASTag Rules: இந்தியாவில் கார் வாங்குபவர்கள், பயணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதிலும் அனைத்து கார்களிலும் பாஸ்டேக் (Fastag) பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. FASTag-க்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வாகன உரிமையாளர்கள் தங்கள் FASTag உடன் வாகன விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

NPCI அமல்படுத்தியுள்ள புதிய விதிகள்

ஃபாஸ்டாக் தொடர்பாக, புதிய விதிகளை NPCI அதாவது தேசிய பண பரிவர்த்தனை வாரியம்  செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிகள், இன்று முதல் அதாவது, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கணினி மூலம் எளிதாக ஃபாஸ்டாக்குகளை அடையாளம் காணும் வகையிலும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் வகையிலும், இந்த புதிய விதி NPCI அமல்படுத்தப்பட்டுள்ளதாக NPCI கூறியுள்ளது. புதிய விதியின்படி, Fastag  தொடர்பாக KYC நடைமுறையை பூர்த்தி செய்வது அவசியம். பாஸ்டேக் பயன்படுத்துவோர், பாஸ்டேக்குடன் வாகனத்தின் பதிவு எண் மற்றும் வாகன இன்ஜின் விபரம் கொண்ட செஸி எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும். புதிதாக வாகனம் வாங்கியவர்கள் தங்கள் பதிவு எண்ணை வாங்கிய 90 நாட்களுக்குள் அப்டேட் செய்ய வேண்டும்.

வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள், மூன்று முதல் ஐந்து ஆண்டு பழமையான பாஸ்டேக்குகளை வைத்திருப்பவர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை இணைக்க வேண்டும். அதே நேரம் ஐந்து வருடங்களுக்கும் மேல் பழமையான பாஸ்டேக்குகளை வைத்திருப்பவர்கள் அதனை முழுமையாக மாற்ற வேண்டும். இதற்கான காலக்கெடுவும் அக்டோபர் 31ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  Fastag க்கான KYC ஆஃப்லைனில் அல்லது ஆன்லைனில் செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம்.

FASTag KYC நடைமுறைக்கு தேவையான ஆவணங்கள்

1. வாக்காளர் அடையாள அட்டை
2. ஆதார் அட்டை
3. ஓட்டுனர் உரிமம்
4. பான் கார்டு
5. NREGA வேலை அட்டை (இருந்தால்)
6. வாகனத்தின் RC
7. கடவுச்சொல் என்னும் பாஸ்வேர்ட்

மேலும் படிக்க | நிலைகுலைந்த இந்திய வங்கிகள்! ஜூலை 31 சைபர் தாக்குதல் எதிரொலி! லேட்டஸ்ட் அப்டேட்!

ஆன்லைனில் KYC நடைமுறையை பூர்த்தி செய்யும் முறை

1. IHMCL Fastag போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.

2.மொபைல் எண் மூலம்  லாக்-இன் செய்ய வேண்டும்.

3. My Profile என்பதை கிளிக் செய்யவும்.

4. KYC நிலையை சரிபார்க்கவும்.

5. KYC டாப்பை கிளிக் செய்து வாடிக்கையாளர் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

6. அடையாளச் சான்று, முகவரி உள்ளிட்ட தேவையான விவரங்களை சமர்பிக்கவும்.

KYC புதுப்பிப்பை ஆஃப்லைனில், அதாவது நேரில் சென்று மேற்கொள்வதற்கான வழிமுறைகள்

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, ஆன்லைனில் தவிர, ஆஃப்லைன் மூலமாகவும் KYC புதுப்பிக்கப்படலாம். இதற்கு ஃபாஸ்டாக் வழங்கும் வங்கி கிளைக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு, விவரங்கள் உங்கள் Fastag கணக்கில் வங்கியால் புதுப்பிக்கப்படும்.

மேலும் படிக்க | மீண்டும் முடங்கியது மைக்ரோசாஃப்ட் சேவைகள்! ஐரோப்பாவை பாதித்த Outage 2.0!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News