Namo TV-க்கு அனுமதி கொடுத்தது ஏன்? தேர்தல் ஆணையம் கேள்வி!

பிரதமர் மோடியின் பெயரில் நமோ டிவி என்னும் தொலைகாட்சியை துவங்க அனுமதி அளித்தது குறித்து மத்திய அரசிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது!

Last Updated : Apr 3, 2019, 05:02 PM IST
Namo TV-க்கு அனுமதி கொடுத்தது ஏன்? தேர்தல் ஆணையம் கேள்வி! title=

பிரதமர் மோடியின் பெயரில் நமோ டிவி என்னும் தொலைகாட்சியை துவங்க அனுமதி அளித்தது குறித்து மத்திய அரசிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது!

மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பிரதமர் மோடியின் பரப்புரைகளை ஒளிபரப்ப 24 மணிநேர தொலைக்காட்சியான நமோ டிவி திடீரென தொடங்கப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரதமர் மோடியின் பரப்புரைகளை ஒளிபரப்புவதற்காக நமோடிவி என்னும் தொலைக்காட்சி கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் தொலைக்காட்சியின் சின்னத்தில் பிரதமர் மோடியின் படமும் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் முறையிட்டனர், மேலும் நமோ டிவியில் அரசின் சாதனைகளை, நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் தனிப்பட்ட சாதனைகளாக சித்தரித்து ஒளிபரப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், திடீரென நமோடிவி தொடங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நமோ தொலைக்காட்சி தொடங்கப்பட்டது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

இதேபோல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பிரதமரி ‘மன் பி சோகிதார்’ நிகழ்ச்சி நமோடிவியில் ஒளிபரப்பானது எப்படி என்றும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Trending News