Elon Musk: ரகசியமாக புதிய AI நிறுவனத்தை உருவாக்கிய எலோன் மஸ்க்..! சாட்ஜிபிடி கலக்கம்

சாட்ஜிபிடி-ஐ உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எலோன் மஸ்க், ரகசியமாக புதிய ஏஐ நிறுவனம் ஒன்றை உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 15, 2023, 12:23 PM IST
Elon Musk: ரகசியமாக புதிய AI நிறுவனத்தை உருவாக்கிய எலோன் மஸ்க்..! சாட்ஜிபிடி கலக்கம் title=

எலோன் மஸ்க் தினமும் டெக் உலகின் கவனத்தை ஈர்க்க தவறுவதில்லை. அவருடைய திட்டங்கள், செயல்பாடுகள் டெக் உலகம் முழுவதும் நாள்தோறும் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப அவரும் வித்தியாசமான அப்டேட்டுகள், டிவிட்டர் மாற்றங்கள் குறித்து தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது அவரைப் பற்றிய ரகசிய தகவல் லீக்காகியுள்ளது. அதுஎன்னவென்றால், மிகவும் ரகசியமாக ஏஐ நிறுவனம் ஒன்றை எலோன் மஸ்க் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. எலோன் மஸ்கிற்கு ஏஐ தொழில்நுட்பம் மீது தீராத ஆர்வம் இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனம் தொடங்கப்பட்டபோது அதில் ஒரு பங்குதாரராக இருந்தார்.

மேலும் படிக்க | FBI Warning: பொது இடங்களில் சார்ஜ் செய்யாதீங்க மக்களே..! அமெரிக்காவின் FBI எச்சரிக்கை

2018-ல் அதில் ஏற்பட்ட சில மாற்றங்கள் பிடிக்காததால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் மஸ்க். ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி வந்தவுடன் உலகம் முழுவதும் பெரும் புயலை ஏற்படுத்தியது. டெக் உலகின் வீச்சை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்ற இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும்போது கூட இருந்தவர் என்ற முறையில் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்களின் அடுத்தடுத்த அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறார் அவர். இப்போது, தானும் ஒரு ஏஐ நிறுவனத்தை ரகசியமாக உருவாக்கிக் கொண்டிருக்கார் மஸ்க். இது குறித்து அவர் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை என்றாலும் கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் இருந்து வெளியேறி ஏஐ தொழில்நுட்ப வல்லுநர்களுடன் சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போதே மஸ்க் ஏஐ தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அது குறித்து அவர் இதுவரை வாய் திறக்கவில்லை. அதேநேரத்தில் ஏஐ தொழில்நுட்பங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத மாற்றங்களையெல்லாம் கொண்டு வரும் என்று தொடர்ந்து கூறி வந்தார். கூகுள் நிறுவனத்துக்கு போட்டியாக களமிறங்கியிருக்கும் சாட்ஜிபிடியின் வீச்சு, அது ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்தும் பேசி வரும் மஸ்க், ரகசியமாக ஏஐ நிறுவனத்தை உருவாக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் டெக் உலகில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு கலக்கத்தை உருவாக்கியிருக்கிறது. 

எலான் மஸ்க் X.AI என்ற நிறுவனத்தின் இயக்குநராக இருப்பதாகவும், அந்த நிறுவனம் இப்போது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர் செயலிகளை வாங்கியிருக்கும் மஸ்க், அதனை புதிய ஏஐ நிறுவனத்தின் கட்டமைப்புகளுக்காக இறக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப வல்லுநர்கள் மஸ்கின் ஏஐ தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | Flipkart Summer Sale: மாஸான போன்களை லேசான விலையில் வாங்கலாம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News