TikTok-ஐ மிஸ் செய்யும் பயனர்களுக்கு Facebook அளித்த பரிசு: புதிய அம்சம் அறிமுகம்

Facebook Reels: உலகளவில் ரீல்களை கிடைக்கச் செய்வதோடு, பேஸ்புக்கில் ரீல் படைப்பாளர்களுக்கான புதிய எடிட்டிங் கருவிகளையும் மெட்டா அறிவித்தது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 23, 2022, 06:44 PM IST
  • மெட்டா ஃபேஸ்புக்கில் ரீல்ஸை அறிமுகப்படுத்தியது.
  • இது 150 நாடுகளில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் உள்ள Facebook பயன்பாட்டில் கிடைக்கும்.
  • இதன் மூலம் படைப்பாளிகளும் பணம் சம்பாதிக்க முடியும்.

Trending Photos

TikTok-ஐ மிஸ் செய்யும் பயனர்களுக்கு Facebook அளித்த பரிசு: புதிய அம்சம் அறிமுகம் title=

மெடா உலகெங்கிலும் ஃபேஸ்புக்கில் தனது டிக்டாக் க்ளோன் ரீல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 150 நாடுகளில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் உள்ள ஃபேஸ்புக் செயலியில் குறுகிய வீடியோக்களான ஷார்ட் வீடியோ பகிர்வு அம்சம் கிடைக்கும் என்று நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. 

இந்த அம்சம் 2020 இல் இன்ஸ்டாகிராமில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், ஃபேஸ்புக்கில் ஒரு பதிவில், "ரீல்ஸ் ஏற்கனவே எங்களின் வேகமாக வளர்ந்து வரும் உள்ளடக்க வடிவமாக உள்ளது. இன்று அதை ஃபேஸ்புக்கில் அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறோம்.” என்று எழுதினார்.

60 வினாடிகள் வரை வீடியோவை உருவாக்க முடியும்

உலகளவில் ரீல்களை கிடைக்கச் செய்வதோடு, பேஸ்புக்கில் ரீல் படைப்பாளர்களுக்கான புதிய எடிட்டிங் கருவிகளையும் மெட்டா அறிவித்தது. பட்டியலில் ரீமிக்ஸ்கள், வரைவுகள் மற்றும் வீடியோ கிளிப்பிங்ஸ் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. ஃபேஸ்புக் விளக்குவது போல, ஃபேஸ்புக்கில் இருக்கும், பொதுவில் பகிரப்பட்ட ரீல்களுடன் பயனர்கள் தங்கள் சொந்த ரீல்களை உருவாக்க ரீமிக்ஸ் அனுமதிக்கும். 

மேலும் படிக்க | கூகுள் மேப் மூலம் சம்பாதிப்பது எப்படி? 

மறுபுறம், வரைவு செயல்பாடு, ரீல்களை வரைவுகளாக சேமிக்க பயனர்களுக்கு உதவுகிறது. வீடியோ கிளிப்பிங் எனப்படும் மூன்றாவது விருப்பம், நீண்ட வடிவ வீடியோக்களை பதிவு செய்வதற்கும் பகிர்வதற்கும் அதிகமான வீடியோ எடிட்டிங் கருவிகளை வழங்கும். இது தவிர, ஃபேஸ்புக் அதன் தளத்தில் 60 வினாடிகள் வரை நீண்ட ரீல்களை பதிவு செய்யும் திறனைக் கொண்டுவருகிறது.

ஃபேஸ்புக் ஸ்டோரீஸ், வாட்ச் மற்றும் நியூஸ்ஃபீடில் ரீல் தோன்றும்

கூடுதலாக, ஃபேஸ்புக் அதன் தளத்தின் அனைத்து இடங்களிலும் ரீல்களை தெரியச்செய்கிறது. சமீபத்தில் வழங்கப்பட்ட ரீல் ஸ்டோரீஸ், வாட்ச் மற்றும் நியூஸ்ஃபீட் ஆகியவற்றில் இப்போது கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில், ஏற்கனவே பின்பற்றும் நபர்களிடமிருந்து ரீல்-இன் பயனர் ஊட்டங்களை நிறுவனம் பரிந்துரைக்கத் தொடங்கும் என்றும் நிறுவனம் கூறியது.

பணம் சம்பாதிக்க முடியும்

சுவாரஸ்யமாக, உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு ரீல் அம்சத்தின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளையும் நிறுவனம் அறிவித்துள்ளது. தனது திட்டத்தை நிறுவனம் மேலும் விரிவுபடுத்துகிறது. இது பல நாடுகளில் உள்ள படைப்பாளர்களுக்கு போனஸ் செலுத்த உதவுகிறது.  மற்றும் விளம்பர வருவாயை உருவாக்க படைப்பாளிகளுக்கு பேனர்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் மூலம் மேலடுக்கு விளம்பரங்களுக்கான பரிசோதனைகளை செய்து பார்க்கவும் இது உதவுகிறது. 

மேலும் படிக்க | இன்றுடன் மூடப்படுகிறது 3ஜி நெட்வொர்க்! இனிமேல் இந்த சாதனங்கள் இயங்காது! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News