Flipkart Big Billion Days: ஸ்மார்ட்போன்களில் சரமாரி சலுகைகள், நம்ப முடியாத தள்ளுபடிகள்

Flipkart Big Billion Days: அதிரடி சலுகைகளுடன் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டுமா? பிளிப்கார்ட் அதற்கு ஒர் அற்புதமான வாய்ப்பை அளித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 23, 2022, 05:39 PM IST
  • ஹை எண்ட் போனான Poco F4 5G-ன் விற்பனை அதன் அசல் விலையான ரூ.28,999-க்கு பதிலாக ரூ.23,499 இல் தொடங்குகிறது.
  • ரியல்மி போன்களும் ரூ.4,000 வரையிலான பெரும் தள்ளுபடியுடன் வருகின்றன.
  • Realme 9 5G ஸ்பீடு எடிஷன் ரூ.14,999க்கு வழங்கப்படுகிறது.
Flipkart Big Billion Days: ஸ்மார்ட்போன்களில் சரமாரி சலுகைகள், நம்ப முடியாத தள்ளுபடிகள் title=

ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில், பல்வேறு வகைகளின் பலவித பொருட்களில் சரமாரியான சலுகைகள் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் வரும் அளவிற்கு ஏகப்பட்ட சலுகைகளும் தள்ளுபடிகளும் கிடைக்கின்றன. 

பிளிப்கார்ட் வழங்கும் பல்வேறு சலுகைகளை மற்றவர்களை விட முன்னதாகவே அணுகும் பிளஸ் உறுப்பினர்களுக்கான விற்பனை செப்டம்பர் 22 வியாழன் அன்று தொடங்கியது. பிளஸ் அல்லாத உறுப்பினர்களுக்கு, பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 23, வெள்ளிக்கிழமை, அதாவது இன்று தொடங்கியது. இந்த விற்பனை இரண்டு வகையான வாடிக்கையாளர்களுக்கும் செப்டம்பர் 30 வரை இருக்கும்.

பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் பல மலிவு விலை, மிட்-ரேஞ் மற்றும் முதன்மை ஸ்மார்ட்போன்கள் நல்ல தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன. நேரடி தள்ளுபடிகள் தவிர, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஃப்ளிப்கார்ட் 10 சதவீத தள்ளுபடியையும் வழங்குகிறது. மேலும், புதிய வாடிக்கையாளர்கள் விற்பனையின் போது பதிவு செய்தால் ரூ. 100 தள்ளுபடி கிடைக்கும்.

பல வகையான ஸ்மார்ட்போன்களில் இந்த விற்பனையில் பல சலுகைகள் கிடைக்கின்றன. 

- Poco C31 ஸ்மார்ட்போன் ரூ.5,999 என்ற ஆரம்ப விலையில் வழங்கப்படுகிறது. இது ரூ.7,000க்கு குறைவான விலையில், சிறந்த அம்சங்களைக் கொண்ட மலிவான ஸ்மார்ட்போனாக அமைகிறது. போக்கோ அதன் M4 Pro மற்றும் X4 Pro 5G வகைகளிலும் தள்ளுபடியை வழங்கியுள்ளது. 

- ஹை எண்ட் போனான Poco F4 5G-ன் விற்பனை அதன் அசல் விலையான ரூ.28,999-க்கு பதிலாக  ரூ.23,499 இல் தொடங்குகிறது. மேலும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி ரூ.1,500 கூடுதல் தள்ளுபடியும் பெறலாம். 

- ரியல்மி போன்களும் ரூ.4,000 வரையிலான பெரும் தள்ளுபடியுடன் வருகின்றன. 9i 5G ரூ 10,999 இல் தொடங்குகிறது. Realme 9 மற்றும் Realme 9i போன்ற 4G ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ 12,999 மற்றும் ரூ 10,999 தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இந்த போன்களுக்கு இந்த விலை மிகவும் மலிவான விலையாக பார்க்கப்படுகின்றது. 

மேலும் படிக்க | Flipkart Big Billion days: ரூ. 15,000 சாம்சங் காலக்சி டாப் போனின் விலை வெறும் ரூ. 8,499

- Realme 9 5G ஸ்பீடு எடிஷன் ரூ.14,999க்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த போன் ரூ.15,000க்கு குறைவான விலையில் இந்தியாவில் கிடைக்கும் வேகமான ஸ்மார்ட்போனாகிறது. Realme GT 2 Pro ரூ.49,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இதில் சுமார் ரூ.13,500 தள்ளுபடி கிடைக்கிறது. Realme 9 Pro+ can ரூ.21,528க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.

- விவோ ஸ்மார்ட்போன்களும் அதன் மலிவு விலையில் ஃபிளாக்ஷிப் மாடல்களில் பெரும் தள்ளுபடியை வழங்குகின்றன. Vivo T1 5G ஃப்ளிப்கார்ட்டில் ரூ. 13,999-க்கு கிடைக்கும். நிறம் மாறும் Vivo V25 Pro 5G ரூ. 32,999க்கு கிடைக்கிறது. நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் பிராண்டுகளான X80 சீரிஸ்களிலும் HDFC வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால் ரூ.3,500 மற்றும் ரூ.4,000 என்ற பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. 

- Xiaomi 11i 5G ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் ரூ. 26,999 முதல் வழங்கப்படுகிறது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி, ICICI வங்கி மற்றும் HDFC வங்கியின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.4,500 வரை தள்ளுபடியைப் பெறலாம். Redmi Note 10T 5G விலை ரூ.11,699 ஆகவும் Xiaomi 11i ஹைப்பர்சார்ஜின் விலை ரூ.24,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- மோட்டோரோலாவும் தள்ளுபடிகளின் பட்டியலில் உள்ளது.  நிறுவனம் அதன் மலிவு மற்றும் நடுத்தர அடுக்கு ஸ்மார்ட்போன்களில் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை வழங்குகிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ரூ.22,749க்கு வழங்கப்படுகிறது. ஜி52 மற்றும் ஜி62 5ஜி ஆகியவை முறையே ரூ.12,599 மற்றும் ரூ.14,499 முதல் தொடங்குகின்றன. G32 மற்றும் G42 முறையே ரூ.9,899 மற்றும் ரூ.11,699 இல் தொடங்குகிறது. மோட்டோ ஜி82 ரூ.18,499க்கு கிடைக்கிறது.

- Infinix இன் ஸ்மார்ட்போன்களான Note 12 மற்றும் Note 12 Pro ஆகியவை ரூ.8,999 மற்றும் ரூ.10,799 முதல் தொடங்குகின்றன. Infinix Note 12 Pro 5G ரூ.12,599க்கு கிடைக்கிறது.

- இந்த விற்பனையில் Oppo K10 ரூ.11,990க்கு வழங்கப்படுகிறது. Oppo Reno 7 Pro 5G மற்றும் Reno 8 5G ஆகியவை முறையே ரூ.33,999 மற்றும் ரூ.26,999க்கு கிடைக்கும். Oppo F19s மற்றும் F19 Pro+ 5G முறையே ரூ.12,990 மற்றும் ரூ.15,990க்கு கிடைக்கும். 

- சாம்சங்கின் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி பிரிவின் விலை ரூ.31,999 ஆக இருக்கும். இது பல அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போனுக்கான சிறந்த விலையாகும். பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது சாம்சங், பட்ஜெட் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஃப்13 ஐ ரூ.8,499க்கும், கேலக்ஸி எஃப்23 5ஜி-யை ரூ.10,999க்கும் வழங்குகிறது.

மேலும் படிக்க | அமேசான் ஆஃபரில் ரூ.13 ஆயிரத்துக்கு ஐபோன்; வாய்ப்பை தவறவிடாதீங்க மக்களே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News