Realme Festive Days: ரூ. 12,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 749-க்கு வாங்கலாம்

இந்த சேலில் ரியல்மியின் அனைத்து ஸ்மார்ட்போன்களும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த பதிவில் Realme C25Y ஸ்மார்ட்போன் பற்றி காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2021, 02:59 PM IST
  • நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கு சரியான நேரம்.
  • இந்த சேலில் Realme C25Y ஸ்மார்ட்போனை ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வாங்கலாம்.
  • Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.475 கேஷ்பேக் வழங்கப்படும்.
Realme Festive Days: ரூ. 12,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 749-க்கு வாங்கலாம் title=

Flipkart Smartphone Offer: நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கு சரியான நேரம். ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் ரியல்மி பண்டிகை நாட்களின் (Realme Festive Days) சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.

இந்த சேலில் ரியல்மியின் அனைத்து ஸ்மார்ட்போன்களும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த பதிவில் Realme C25Y ஸ்மார்ட்போன் பற்றி காணலாம். இந்த சேலில் இந்த ஸ்மார்ட்போனை ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வாங்கலாம். இவ்வளவு மலிவான விலையில் இந்த ஸ்மார்ட்போனை எவ்வாறு வாங்குவது என இங்கே காணலாம். 

ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்

இந்த பிளிப்கார்ட் (Flipkart) சேலில் Realme C25Y ஸ்மார்ட்போன் மிக மலிவான விலையில் கிடைக்கிறது. இது ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும். வெளி சந்தையில் ரூ.12,999 என்ற விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட்டில் 15% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.10,999-க்கு கிடைக்கிறது. 

Flipkart இன் இந்த டீலில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.10,250 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-லிருந்து வெறும் ரூ.749 ஆகக் குறையும்.

ALSO READ | Flipkart சூப்பர் சலுகை: ரூ. 30,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 449-க்கு வாங்கலாம்

இந்த டீலில் வங்கி சலுகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன

இந்த ஃபோனை வாங்க, ஏதேனும் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ப்ரீபெய்ட் சலுகையின் கீழ் ரூ.1,500 உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும், Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.475 கேஷ்பேக் வழங்கப்படும். இதன் மூலம் இந்த போனை ரூ.10,999-க்கு பதிலாக ரூ.9,024-க்கு பெறலாம்.

Realme C25Y இன் அம்சங்கள்

ரியல்மியின் (Realme) இந்த 4ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. Unisock T610 octa core செயலியில் வேலை செய்யும் இந்த ஸ்மார்ட்போனில், 6.5-inch Full HD + LCD இன்-செல் டிஸ்ப்ளே கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் பிரதான சென்சார் 50MP, வைட் ஆங்கிள் லென்ஸ் 2MP மற்றும் மேக்ரோ லென்ஸ் 2MP உள்ளது. செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும், 8MP முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) 5,000mAh பேட்டரியுடன் வருகிறது.

Flipkart இல் நடைபெறும் இந்த Realme Festive Days விற்பனையில், ஒவ்வொரு விலை வரம்பிலும் Realme ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனை டிசம்பர் 13 வரை இருக்கும்.

ALSO READ | Flipkart பம்பர் சலுகை: ரூ. 17,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 99-க்கு வாங்கலாம்

Trending News