இனி உங்கள் பணப்பரிவர்த்தனைக்கு SMS அலெர்ட் வராது! இனி உஷாரா இருக்கணும்

இனி எல்லா பரிவர்த்தனைகளுக்கும் எஸ்எம்எஸ் வராது என ஹெச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் இனி உஷாராக இருக்க வேண்டும்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 29, 2024, 05:43 PM IST
  • பணப்பரிவர்த்தனைக்கு SMS அலெட்ர் வராது
  • ஹெச்டிஎஃப்சி வங்கி அதிரடி அறிவிப்பு வெளியீடு
  • யுபிஐ மூலம் பணம் அனுப்பினால் இமெயில் அலெர்ட் வரும்
இனி உங்கள் பணப்பரிவர்த்தனைக்கு SMS அலெர்ட் வராது! இனி உஷாரா இருக்கணும் title=

இப்போது சிறிய பரிவர்த்தனைகளுக்கும் UPI செயலி பயன்படுத்துவது என்பது அதிகரித்துள்ளது. நீங்கள் பணம் செலுத்தும்போது அல்லது எங்கிருந்தோ உங்கள் கணக்கிற்கு பணம் வரும்போது, அந்தத் தொகை வெறும் ஒரு ரூபாயாக இருந்தாலும் கூட, உங்களுக்கு ஒரு SMS அதாவது குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை வரும். ஆனால், இது இப்போது நடக்காது என்றும், இது தொடர்பான தகவல்களை ஹெச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது.முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, குறைந்த தொகைக்கான பரிவர்த்தனைகளுக்கான SMS எச்சரிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. HDFC வங்கியின் இந்த முடிவு அடுத்த மாதம் ஜூன் 25 முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க | மருத்துவ காப்பீடு துறையில் கால்பதிக்க தயாராகும் LIC... வெளியான முக்கிய தகவல்..!!

HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய தகவலின்படி, ஜூன் 25 முதல் குறைவான மதிப்புள்ள பரிவர்த்தனைகள் தொடர்பான SMS அனுப்பப்படாது. இருப்பினும், பணம் பெறுவதற்கும் அனுப்புவதற்கும் எச்சரிக்கை வரம்பு வேறுபட்டது. வங்கி அனுப்பிய தகவலின்படி, இப்போது 100 ரூபாய்க்கு குறைவான செலவுகளுக்கு எஸ்எம்எஸ் எச்சரிக்கை வராது. இது தவிர, ரூ. 500 வரையிலான கிரெடிட்டிற்கு எச்சரிக்கை பெறப்படாது. இருப்பினும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் மின்னஞ்சல் எச்சரிக்கை கிடைக்கும். . அத்தகைய சூழ்நிலையில், வங்கி தனது அனைத்து வாடிக்கையாளர்களையும் தங்கள் Email ஐடியைப் புதுப்பிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது, இதனால் அவர்கள் தங்கள் மின்னஞ்சலில் ஒவ்வொரு பரிவர்த்தனையின் எச்சரிக்கைகளையும் பெற முடியும்.

கடந்த சில ஆண்டுகளாக, UPI மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் சராசரி மதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து இப்போது சிறிய பரிவர்த்தனைகளுக்கும் UPI-ன் பயன்பாடு அதிகரித்துள்ளதை யூகிக்க முடிகிறது. வேர்ல்ட்லைன் இந்தியாவின் அறிக்கையின்படி, ஃபோன்பே, கூகுள்பே மற்றும் பேடிஎம் ஆகியவை பரிவர்த்தனைகளின் அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் நாட்டில் உள்ள மூன்று முக்கிய UPI செயலிகளாக இருக்கின்றன. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தரவுகளின்படி, 2023 காலண்டர் ஆண்டில் UPI மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் 10 ஆயிரம் கோடிகளைத் தாண்டி சுமார் 11.8 ஆயிரம் கோடிகளை எட்டியுள்ளன.

மேலும் படிக்க | வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்? வரியை சேமிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News