வெறும் ரூ.19-ல் அதிவேக இணைய வசதி, இன்னும் பல நன்மைகள்: அசத்தும் Vi!!

Cheapest Recharge Plan: இத்தனை குறைந்த விலையில், இவ்வளவு நல்ல ரீசார்ஜ் திட்டமா என வியக்க வைக்கும் ரூ. 19 ரீசார்ஜ் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 13, 2023, 11:56 AM IST
  • வோடபோன் ஐடியாவின் இந்த ரூ.19 டேட்டா வவுச்சரில் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் வழங்கப்படுகின்றன?
  • 19 ரூபாய்க்கு ஈடாக, Vi இலிருந்து 1ஜிபி அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படும்.
  • இந்த டேட்டா வவுச்சர் எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும்?
வெறும் ரூ.19-ல் அதிவேக இணைய வசதி, இன்னும் பல நன்மைகள்: அசத்தும் Vi!! title=

ரீசார்ஜ் திட்டம்: இன்றைய காலகட்டத்தில், இணையம் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து விட்டது. இணைய தொடர்பு இல்லாமல் ஒரு நாள், ஒரு மணி நேரம் கூட நம்மால் செலவிட முடியாது. இந்த நிலை அனைவருக்கும் இல்லை என்றாலும், நம்மில் பெரும்பாலானோருக்கும் அப்படித்தான் உள்ளது. நமது பல அத்தியாவசிய பணிகளை செய்துமுடிக்க நமக்கு இணைய வசதி தேவைப்படுகின்றது. இதனால் நமக்கு பல வித அலைச்சல்களும் நேர விரயமும் தவிர்க்கப்படுகின்றன.

பொதுவாக, மக்கள் வீடுகளில் வைஃபை இருக்கும், போனில் கண்டிப்பாக இன்டர்நெட் பேக் இருக்கும். ஆனால், நாம் எங்காவது வெளியே சென்று நம் டேட்டா பேக் தீர்ந்துவிட்டால், அப்போது, தற்காலிகமாக ஒரு சிறிய தொகையில் ஒரு டேட்டா பேக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றும். அப்படிப்பட்ட நேரங்களில் வெறும். 19 ரூபாய்க்கும் நமது போனில் ரீசார்ஜ் செய்யலாம் என்று கூறினால் பலரால் நம்ப முடியாமல் போகாலாம். ஆனால், இது உண்மை. வெறும் 19 ரூபாய்க்கு எப்படி அதிவேக இன்டர்நெட் இணைப்பை பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 

வெறும் 19 ரூபாய்க்கு வேகமான இணைய வசதி கிடைக்கும்

பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா (Vi) வழங்கும் அற்புதமான டேட்டா வவுச்சரைப் பற்றி இங்கே காணலாம். இந்த டேட்டா வவுச்சரின் விலை ரூ. 19 மட்டுமே. இதன் மூலம் வெறும் ரூ.19 -ல் அபரிமிதமான வேகத்தில் 4ஜி இணையத்தைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | தினம் 5 ரூபாய் போதும்.. 600ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் இலவச ஓடிடி

Vi இன் தரவு வவுச்சரின் நன்மைகள்

வோடபோன் ஐடியாவின் இந்த ரூ.19 டேட்டா வவுச்சரில் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் வழங்கப்படுகின்றன என்பதை தெரிந்துகொள்ளலாம். 19 ரூபாய்க்கு ஈடாக, Vi இலிருந்து 1ஜிபி அதிவேக 4ஜி டேட்டா ஆகியவை வழங்கப்படும். இந்த டேட்டா வவுச்சர் ஒரு நாளைக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. வோடஃபோன் ஐடியா இன்னும் பல மலிவு விலை டேட்டா வவுசர்களையும் அளிக்கின்றது. ரூ.48, ரூ.58 மற்றும் ரூ.98 ஆகிய விலை வகைகளில் இவை உள்ளன. 

மேலும் விருப்பங்கள் உள்ளன

வோடஃபோன் ஐடியா வழங்கும் பிற டேட்டா வவுச்சர்களைப் பற்றி பேசினால், 48 ரூபாய்க்கு 21 நாட்களுக்கு 2ஜிபி இணைய வசதி வழங்கப்படுகிறது. 58 ரூபாய் வவுச்சரில், 28 நாட்களுக்கு 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் 98 ரூபாய் டேட்டா வவுச்சரில் 21 நாட்களுக்கு 9ஜிபி இணைய வசதி கிடைக்கும். 

இந்த திட்டங்களில், வோடஃபோன் ஐடியாவின் 58 ரூபாய் திட்டம் அதிகபட்ச வேலிடிட்டி, அதாவது செல்லுபடியாகும் கால அளவைக் கொண்டுள்ளது. 

ஜியோவின் டேட்டா வவுச்சர்கள்

ஜியோ நிறுவனமும் டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது. இதன் விலை ரூ.15 ஆகும். இந்த திட்டத்தில், பயனர்கள் 1ஜிபி 4ஜி டேட்டாவைப் பெறுகிறார்கள். மேலும் அதன் செல்லுபடி காலம் பயனரின் அடிப்படைத் திட்டத்தின் (பேஸ் பிளான்) படி இருக்கும்.

மேலும் படிக்க | பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.50 க்கும் குறைவான சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் லிஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News