மொபைல் எண் மூலம் பான் அட்டை பெறலாம்! எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்?

ஆன்லைனில் உடனடி பான் அட்டையை மொபைல் எண் மூலம் பெறுவது எப்படி? இந்த இரண்டு நிபந்தனைகளையும் நீங்கள் பூர்த்தி செய்தால்  உடனடி பான் கார்டையும் பெறலாம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 24, 2020, 08:01 PM IST
மொபைல் எண் மூலம் பான் அட்டை பெறலாம்! எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்? title=

Instant PAN Online: இப்போது பான் கார்டை வாங்குவது முன்பை விட எளிதானது. நீங்கள் வீட்டில் உட்கார்ந்துக்கொண்டே சில நிமிடங்களில் புதிய பான் (Pan Card) அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அதுவும் ஆன்லைனில் உடனடி பான் அட்டையை பெறலாம். உங்களுக்கு தேவையானது உங்கள் ஆதார் அட்டை மற்றும் அதில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருந்தால், விண்ணப்பதாரர்களுக்கு மின்னணு பான் அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 

இந்த இரண்டு நிபந்தனைகளையும் நீங்கள் பூர்த்தி செய்தால், உடனடி பான் கார்டையும் பெறலாம். இதற்காக, ஆதார் எண் (Aadhaar) அடிப்படையிலான இ-கேஒய்சியின் (e-KYC) செயல்முறை பின்பற்றப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், உடனடி பான் கார்டுகள் அசல் பான் கார்டுகளைப் போலவே செல்லுபடியாகும். உடனடி பான் அட்டை வருமான வரித்துறை (Income Tax Department) இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

ALSO READ |  PAN கார்டு தொலைந்து விட்டதா.. கவலை வேண்டாம்.. டூப்ளிகேட் பான் பெறும் எளிய வழி இதோ..!!!

மொபைல் எண் மூலம் பான் அட்டை பெறுவது எப்படி (How to get PAN through mobile number):

1. முதலில் https://www.incometaxindiaefiling.gov.in/home இல் வருமான வரி வலைத்தளத்தின் இந்த இணைப்பைப் பார்வையிடவும்
2. இப்போது இடதுபுறத்தில் உள்ள விரைவு இணைப்புகளுக்குச் (Quick Link) செல்லவும்.
3. இப்போது Instant PAN through Aadhaar ஐக் கிளிக் செய்க
4. ஒரு புதிய இடைமுகம் உங்களுக்கு முன்னால் திறக்கும் (Get New Pan)
5. ஆதார் எண் மற்றும் கேப்ட்சா (Captcha) குறியீட்டை உள்ளிடவும்
6. Generate Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்க
7. பதிவு செய்யப்பட்ட எண்ணில் பெறப்பட்ட OTP எண்ணை உள்ளிடவும்
8. ஆதார் விவரங்களை சரிபார்க்கவும்
9. ஒப்புதல் எண் உருவாக்கப்படும், பான் நிலைகளை அறிந்து அதை உங்களுடன் வைத்திருங்கள்.
10. உங்கள் மின்னஞ்சல் ஐடி ஆதாரில் பதிவுசெய்யப்பட்டிருந்தால், அதைப் பார்வையிடுவதன் மூலம் ஈ-பான் பதிவிறக்கவும் அல்லது "செக் ஸ்டேட்டஸ் (Check Status) / டவுன்லோட் பான் (Download PAN)" இல் பான் அட்டையை PDF வடிவத்தில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News