சான்ஸே இல்ல...இவ்வளவு கம்மி விலையில iPhone 14 கிடைக்குதா?

Valentine's Day discount on iPhone 14: காதலர் தினத்தை முன்னிட்டு ஆப்பிளின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான iVenus ஐபோன் 14ஐ மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 14, 2023, 04:10 PM IST
  • ஐபோனில் காதலர் தின தள்ளுபடி.
  • iPhone 14 விலைக் குறைப்பு.
சான்ஸே இல்ல...இவ்வளவு கம்மி விலையில iPhone 14 கிடைக்குதா? title=

உலக முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகலில் பெரும் தள்ளுபடியை வழங்கியுள்ளது. இப்போது நாம் சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி பேசுகையில், முதலில் ஐபோன் தான் வரும். அதன்படி ஐபோன் 14 சீரிஸ் கடந்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொடரின் வெண்ணிலா மாடல் அதாவது iPhone 14 மிகவும் பிரபலமானது. இந்த காதலர் தினத்தை முன்னிட்டு ஆப்பிளின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான iVenus ஐபோன் 14ஐ மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.

iPhone 14 சலுகைகள் & தள்ளுபடிகள்
ஐபோன் 14 தவிர, iVenus இல் iPhone 14 Plus, iPhone 13, AirPods Pro, iPads, MacBook ஆகியவற்றில் பல தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் மட்டுமே iVenus ஸ்டோர்கள் உள்ளன என்பது தான். இருப்பினும், நீங்கள் டெல்லி NCR இல் வசிப்பவராக இருந்தால், ஐபோன் 14 மற்றும் பிற மாடல்களுக்கான ஒப்பந்தங்களை இமேஜின் ஸ்டோரில் பார்க்கலாம். எனவே இப்போது நாம் ஐபோன் 14 ஐ எவ்வாறு மலிவாக வாங்க முடியும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | காதலர் தின ஸ்பெஷல்..ஜியோ பயனர்களுக்கு மெக்டொனால்ட்சு பர்கர் இலவசம் 

வெறும் 37,900 ரூபாக்கு iPhone 14
ஐபோன் 14 இன் ஒரிஜினல் விலை ரூ. 79,900 ஆகும், ஆனால் iVenus ஸ்டோரில் இருந்து ரூ.37,900 விலையில் வாங்கலாம். iVenus ஸ்டோர் சாதனத்தில் ரூ.8000 பிளாட் தள்ளுபடி வழங்குகிறது. இது தவிர, எச்டிஎஃப்சி வங்கியின் கார்டைப் பயன்படுத்தினால், 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த ஃபோனில் ரூ.22,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுகிறது. அனைத்து ஒப்பந்தங்களையும் பயன்படுத்திய பிறகு, இந்த போனின் விலை ரூ.37,900 ஆக இருக்கும்.

ஐபோன் 14 விவரக்குறிப்புகள்
ஐபோன் 14 ஃபோனில் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே 60hz புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது. ஃபோன் 1200-நிட்ஸ் பிரகாசம் மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார் உடன் வருகிறது. ஐபோன் 14 ஐ இயக்குவது A15 பயோனிக் சிப் ஆகும், இதில் 16-கோர் NPU மற்றும் 5-கோர் கிராபிக்ஸ் செயலி உள்ளது. அதேபோல் இதில் சமீபத்திய iOS 16 பதிப்பில் இயங்குகிறது. ஐபோன் 14 இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | ரூ.155க்கு அசத்தல் ஆப்பரை வழங்கியுள்ள ஏர்டெல்! சிறப்பம்சங்கள் என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News