Amazon Latest Offer: நீங்க போனை வாங்குனா போதும்... ஆஃபரை அள்ளி வழங்கிய 5ஜி மொபைல்..!

iQOO ஃபிளாக்ஷிப் 5G போன்கள் அமேசான் விற்பனையில் பெரும் தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 12, 2023, 03:31 PM IST
  • மிகச் சிறந்த 5ஜி மொபைல்
  • அமேசான் ஆஃபரில் விற்பனை
  • மிக குறைந்த விலையில் வாங்கலாம்

Trending Photos

Amazon Latest Offer: நீங்க போனை வாங்குனா போதும்... ஆஃபரை அள்ளி வழங்கிய 5ஜி மொபைல்..! title=

நீங்களும் புதிய ஸ்மார்ட்போனை பம்பர் தள்ளுபடியுடன் வாங்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அமேசான் விற்பனையில் இருக்கும் மிக சிறந்த ஆஃபர் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அதாவது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023ன் கீழ் iQOO ஃபிளாக்ஷிப் போன்களில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதேபோல் மற்ற IQ போன்களுக்கும் பம்பர் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலிவு விலையில் உங்களுக்கான சரியான போனை நீங்கள் தேர்வு செய்யலாம். எனவே IQ ஃபோன்களில் கிடைக்கும் சலுகைகள் பற்றி பார்க்கலாம்.

iQoo Z7 Pro, iQoo Neo 7-ல் சிறந்த ஒப்பந்தம்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் அக்டோபர் 8 முதல் தொடங்கி உள்ளது. இந்த விற்பனையில், iQoo Z7 Pro-ன் விலை ரூ.21,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.23,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேசமயம் iQoo Neo 7 ஸ்மார்ட்போனை ரூ.27,999க்கு வாங்கலாம். இதன் எம்ஆர்பி விலை ரூ.31,999.

மேலும் படிக்க | GoPro கேமரா 50% தள்ளுபடி..! யூடியூபர்களுக்கு ஜாக்பாட் - அமேசானில் அதிரடி ஆஃபர்

iQoo Neo 7 Pro மீது தள்ளுபடி

இந்த விற்பனையில், iQoo Neo 7 Pro ஐ உங்கள் வீட்டிற்கு ரூ.30,999 விலையில் கொண்டு வர முடியும். இது ஜூலை மாதம் ரூ.34,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. iQoo Z7s இன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு மாறுபாட்டை ரூ.15,499க்கு வாங்கலாம். இதன் விலை ரூ.18,999.

இந்த iQoo போன்களுக்கு பம்பர் தள்ளுபடியும் கிடைக்கும்

அமேசான் விற்பனையில், வாடிக்கையாளர்கள் iQOO 11-ஐ பம்பர் தள்ளுபடியில் ரூ. 12,000 விலையில் வாங்கி தங்கள் வீட்டிற்கு கொண்டு வரலாம். இது தவிர, நிறுவனத்தின் மற்ற போன்களான iQoo Z7s, iQoo Z7 Pro, iQoo Neo 7 Pro மற்றும் iQoo Neo 7 ஆகியவற்றையும் பெரிய தள்ளுபடியுடன் வாங்கலாம். இது தவிர, iQoo தனது பிரீமியம் ஸ்மார்ட்போன்களை பெரும் தள்ளுபடியுடன் வாங்கும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதன் கீழ் iQoo 9 ரூ.27,990-க்கு கிடைக்கிறது. ஒரிஜினல் விலை ரூ.42,990. அதேசமயம் iQoo 11 ஆனது 47,999 ரூபாய்க்கு கிடைக்கும். இதன் விலை 59,999 ரூபாய். வாடிக்கையாளர் iQoo 9 Pro ஐ வெறும் 37,990 ரூபாய்க்கு வாங்கலாம்.

மேலும் படிக்க | ஜியோ வாடிக்கையாளர்களே..! நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் இலவசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News