சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய செயற்கைக்கோள் அனுப்பும் ஈரான்!

அமெரிக்காவுடனான ஆழ்ந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், ஈரான் விரைவில் ஒரு புதிய செயற்கைக்கோளை அனுப்பப்போவதாக அறிவித்துள்ளது. 

Last Updated : Feb 2, 2020, 01:59 PM IST
சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய செயற்கைக்கோள் அனுப்பும் ஈரான்! title=

அமெரிக்காவுடனான ஆழ்ந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், ஈரான் விரைவில் ஒரு புதிய செயற்கைக்கோளை அனுப்பப்போவதாக அறிவித்துள்ளது. 

இருப்பினும், இந்த செயற்கைக்கோள் இராணுவத்திற்கு எந்த நன்மையையும் தருமா இல்லையா என்பது வரையறுக்கப்படவில்லை. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் ஈரான் தனது புதிய செயற்கைக்கோள் குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையே போர் துவங்கும் சூழ்நிலைகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், ஈரான் இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதாக அறிவித்து, அமெரிக்காவிற்கு இந்த பதற்றம் எங்கும் அதன் வளர்ச்சிக்கு தடையாக இல்லை என்று ஒரு செய்தியை வழங்கியுள்ளது.

கிடைத்த தகவல்களின்படி, நாட்டின் தேசிய விண்வெளி அமைப்பின் தலைவர் மோர்டெஸா பெராரி, இந்த செயற்கைக்கோளின் கட்டுமானம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், 80 ஈரானிய விஞ்ஞானிகள் இந்த பணியை ஒன்றாக செய்துள்ளனர். இந்த செயற்கைக்கோளை 18 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் வகையில் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 113 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் பூமியிலிருந்து 530 கிலோமீட்டர் (329 மைல்) தொலைவில் உள்ள சிமோர்க் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படங்களை சேகரிப்பதே இந்த செயற்கைக்கோளின் முதன்மை நோக்கம் என்று ஜஹான் பெராரி மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இயற்கை பேரழிவுகள் குறித்து செயற்கைக்கோள் எச்சரிக்கை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பூகம்பங்களை குறித்து தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும், விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கு தரவை பெறமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஈரானின் சிறப்பு அறிவியலுக்கான வரலாற்று படியாக இருக்கும். அதற்கு முன்பே ஈரான் பூமிக்கு மேலே 250 கிமீ (155 மைல்) செயற்கைக்கோளைச் சுற்றி வர முடிந்தது என்று பெராரி குறிப்பிட்டுள்ளார்.

Trending News