கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதி அன்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசுகளின் காரணமாக காற்று மாசுபாடும் அதிகரித்துள்ளது. இதில், தீபாவளி பண்டிகைக்கு பின் காற்று மாசுபாடு அதிகரிப்பில் ராஜஸ்தான் மாநிலம் பிவாடி என்ற இடம் முதலிடத்தை பிடித்து உள்ளது. சென்னை 9-வது இடத்தையும் டெல்லி 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்நிலையில் தீபாவளி அன்றுறைய தினம் இந்தியா எப்படி இருந்தது என்ற உண்மையான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாவ்லோ நெசபோலி என்ற விஞ்ஞானி, அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
Diwali, the Hindu Festival of Lights, starts today. #HappyDiwali to everyone! #VITAmission pic.twitter.com/Uygnc8tTWx
— Paolo Nespoli (@astro_paolo) October 19, 2017