Jio vs Airtel vs VI: 2 மாத வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் சிறந்தது எது?

நாட்டின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டங்களை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கொண்டு வந்துள்ளது.    

Written by - RK Spark | Last Updated : May 21, 2023, 06:32 AM IST
  • ஏர்டெல் வின்க் மியோசிக் மற்றும் இலவச ஹெலோ டியூன்களுக்கு இலவச சந்தா வழங்குகிறது.
  • ஜியோ செக்யூரிட்டி, ஜியோ சினிமா ஆகியவற்றுக்கான இலவச அணுகலையும் வழங்குகிறது.
  • டேட்டா டிலைட் மற்றும் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் வசதியும் வழங்கப்படுகிறது.
Jio vs Airtel vs VI: 2 மாத வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் சிறந்தது எது? title=

மாதந்தோறும் ரீசார்ஜ் செய்வதில் பலரும் எரிச்சலடைகின்றனர், சிலர் கூடுதல் தொகையை செலவழித்து ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்து கொள்கின்றனர்.  இனிமேல் நீங்கள் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்து சிரமப்பட வேண்டியதும் இல்லை, ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை.  நாட்டின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இரண்டு மாத காலங்களுக்கு வேலிடிட்டியுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.  நாட்டின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டங்களை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கொண்டு வந்துள்ளது.  இந்த திட்டத்தில் இலவச அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் அன்லிமிடெட் டேட்டா போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது.  இப்போது இந்த மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ரீசார்ஜ் திட்டத்தில் எந்தத் திட்டம் சிறந்தது என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க | Best Affordable Cars: ரூ. 5 லட்சத்தை விட குறைவான விலையில் கிடைக்கும் டாப் கார்கள்

ஏர்டெல் ரூ 479 திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.479 விலையில் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது.  இது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியை வழங்குகிறது.  இது தவிர, இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.  இது தவிர, விண்க் மியோசிக் மற்றும் இலவச ஹெலோ டியூன் போன்ற பயன்பாடுகளின் இலவச சந்தாகளையும் வழங்குகிறது.

ஜியோ ரூ 479 திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.479 விலையில்  56 நாட்களுக்கு செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தினை வழங்குகிறது.  இதில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 1.5ஜிபி டேட்டா நன்மைகள் வழங்கப்படுகிறது.  இது தவிர, ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான இலவச அணுகலையும் வழங்குகிறது.

வோடோபோன் ரூ.479 திட்டம்:

வோடோபோன் ஐடியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.479 விலையில்  56 நாட்களுக்கு செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தினை வழங்குகிறது.  இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா நன்மைகளை வழங்குகிறது.  இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டாவின் நன்மைகளும் கிடைக்கிறது.  இது தவிர வோடோபோனின் பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் கிடைக்கிறது.  மேலும் இதனுடன் டேட்டா டிலைட் மற்றும் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் வசதியும் வழங்கப்படுகிறது.

மேலும் வோடோஃபோன் ஐடியா (விஐ) தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய ரீசார்ஜ் திட்டம் வெறும் ரூ. 45க்கு கிடைக்கிறது. இந்த ரூ.45 ரீசார்ஜ் திட்டம் 180 நாட்களுக்கு ஒரு மிஸ்டு கால் அலர்ட் சேவையுடன் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது.  மொபைல் ஸ்விட்ச் ஆஃப் அல்லது ஃபிளைட் மோடில் இருக்கும் போது முக்கியமான அழைப்புகளைத் தவறவிடுபவர்களுக்கு இது உதவிகரமானதாக இருக்கிறது. இருப்பினும், இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களை செய்தி அனுப்புதல், இணையம் அல்லது ஓடிடி போன்ற சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்காது.  சமீபத்தில் வோடோஃபோன் ஐடியா (விஐ) இந்தியாவில் உள்ள தனது பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ் சலுகைகளை அறிவித்தது.  இந்த சலுகையின் ஒரு பகுதியாக, பயனர்கள் விஐ செயலி மூலமாக செய்யப்படும் ரீசார்ஜ்களில் கூடுதலாக 5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த சலுகை ரூ.199க்கு மேல் உள்ள 'மஹா ரீசார்ஜ்'களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.  இந்த சலுகையின்படி ரூ.199 முதல் ரூ.299 வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கூடுதலாக 2ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் ரூ.299க்கு மேல் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 5ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும் மற்றும்  கூடுதல் இலவச டேட்டா மூன்று நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும், பின்னர் அது காலாவதியாகிவிடும்.

 

மேலும் படிக்க: அதிர்ச்சி தகவல்! மொபைல் கவர் பயன்படுத்துவதால் இவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News