OTT தளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக ஏற்படும் மாற்றங்கள் என்ன..!!!

OTT தளங்கள் அதாவது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, எம்எக்ஸ் பிளேயர், ஹாட்ஸ்டார் மற்றும் செய்தி வலைத்தளங்கள் போன்ற ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் இப்போது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 12, 2020, 10:50 PM IST
  • OTT தளங்கள் அதாவது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, எம்எக்ஸ் பிளேயர், ஹாட்ஸ்டார் மற்றும் செய்தி வலைத்தளங்கள் போன்ற ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் இப்போது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வருகின்றன.
  • OTT மற்றும் ஆன்லைன் உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
OTT தளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக ஏற்படும் மாற்றங்கள் என்ன..!!! title=

OTT தளங்கள் அதாவது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, எம்எக்ஸ் பிளேயர், ஹாட்ஸ்டார் மற்றும் செய்தி வலைத்தளங்கள் போன்ற ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் இப்போது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வருகின்றன.

மத்திய அரசு (Central Government) புதன்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டு இது குறித்து தகவலை அளித்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளார், ஆனால் இது தொடர்பாக எந்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்படவில்லை. 

OTT மற்றும் ஆன்லைன் உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக  இருந்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. டிவியை விட ஆன்லைன் தளங்களை கண்காணிப்பது அவசியம் என்று வாதத்தில் கூறப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த தணிக்கை மூலம் என்ன மாற்றம் ஏற்படும்?

முதலாவதாக, நாட்டில் ஆன்லைன் தளங்களில் வெளியாகும் படங்கள் வீடியோக்கள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றின் உள்ளடக்கத்தை கண்காணிக்க எந்த சட்டமும் இல்லை.

 ஆனால் ஆன்லைன் தளங்களில் வெளியாகும் விஷயங்கள் தொடர்பான தொடர்ச்சியான புகார்களுக்குப் பிறகு, அவை கண்காணிக்கப்பட வேண்டும், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ALSO READ | Google Drive-ல் உள்ள புகைப்படங்கள் காணாமல் போகலாம்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன..!!!

இது குறித்து நீதிமன்றம் கடந்த மாதம்  மத்திய அரசு மற்றும் இணைய-மொபைல் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. வீடியோ தளங்களைத் தவிர, செய்தி இணையதளங்களும் ஆன்லைன் உள்ளடக்க தணிக்கையின் கீழ் வரும்.

தற்போது, ​​பல்வேறு வகையான செய்தி இணையதளங்கள் உள்ளன. இவற்றின் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் இனி தணிக்கை செய்யப்படும். அது குறித்து ஒரு சட்டம் உருவாக்கப்படும். இதில் பதிவு பிறகு மட்டுமே தளத்தை இயக்க முடியும். அதே நேரத்தில், தணிக்கை இல்லாததால், OTT இயங்குதளங்கள் பொழுதுபோக்கு என்ற பெயரில் உண்மைக்கு புரம்பான மற்றும் ஆபாசமான படங்கள் வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன, போலி செய்திகள்  பரப்பப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றன, ஆனால் இப்போது கட்டுப்பாட்டில் வந்த நிலையில், இனி இது நடக்காது.

இந்திய அரசின் தணிக்கைக்குப் பிறகு, OTT தளத்தில் பல மாற்றங்கள் இருக்கும், அதாவது எந்த வயதினரால் எந்தப் படத்தைப் பார்க்க முடியும் என்பது போன்ற அளவுகோல் வைக்கப்படும். ஆபத்தான காட்சிகள், மிக வன்முறை காட்சிகள் ஆகியவை அகற்றப்படும். 

ALSO READ | பயங்கரமான கனவுகள் வருகிறதா.. உங்கள் பிரச்சனையை தீர்க்க வருகிறது Apple Watch..!!!

Trending News