நூர்துங் எலக்ட்ரிக் பைக்கின் சிறப்பம்சங்கள்! 300Wh பேட்டரி! 60 கிமீ மைலேஜ்

Noordunge electric Bike: நூர்துங் எலக்ட்ரிக் பைக் பல சிறந்த அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்ட இதன் சிறப்பம்சங்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 25, 2022, 04:08 PM IST
  • 60 கிமீ மைலேஜ் கொண்ட நூர்துங் எலக்ட்ரிக் பைக்கின் சிறப்பம்சங்கள்
  • மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்ட நூர்துங் எலக்ட்ரிக் பைக்
  • பல சிறந்த அம்சங்களுடன் களத்தில் இறங்கிய நூர்துங் எலக்ட்ரிக் சைக்கிள்
நூர்துங் எலக்ட்ரிக் பைக்கின் சிறப்பம்சங்கள்! 300Wh பேட்டரி! 60 கிமீ மைலேஜ் title=

புதுடெல்லி: நூர்துங் எலக்ட்ரிக் பைக் பல சிறந்த அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பும் மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. பைக்கின் வரம்பும் நன்றாக உள்ளது. அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். 60 கிமீ ரேஞ்ச் 300Wh பேட்டரியுடன் சந்தையில் நுழைந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற யூரோபைக் 2022 நிகழ்வில் நூர்டுங் எலக்ட்ரிக் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மின்சார பைக்கில், காற்று மாசுபாடு சென்சார், புளூடூத் இணைக்கப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் பூம் பாக்ஸ் பவர் பேங்க் உள்ளது. அதன் வடிவமைப்பும் மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது.

பல மேம்பட்ட அம்சங்கள் கொண்டுள்ள நூர்டுங் எலக்ட்ரிக் பைக், ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிமீ வரை செல்லும். அதாவது ஒருமுறை பைக்கை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை இந்தை ஓட்டலாம். பூம்பாக்ஸுடன் சுமார் 20.8 கிலோ எடை கொண்ட மிகவும் இலகுவான பைக் இது.

இந்த எலக்ட்ரிக் பைக்கில் கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட பிரேம் உள்ளது. யார் வேண்டுமானாலும் இதனை எளிதாக இயக்கலாம்.

அட்வான்ஸ் அம்சங்கள்
இதன் காற்று மாசு சென்சார் அம்சம், பயணத்தின்போது காற்று மாசுபாட்டைக் கண்டறிய உதவுகிறது. அதன் தரவு பரவலாக்கப்பட்ட காற்று மாசு தரவு நெட்வொர்க்கில் கொடுக்கப்படுகிறது. பூம்பாக்ஸில் வழங்கப்பட்ட நான்கு நவீன உயர் தொழில்நுட்பக் கொண்ட ஸ்பீக்கர்களை புளூடூத் வழியாக இணைக்க முடியும். பொத்தான் அமைப்புகளைப் பயன்படுத்தி பைக்கை எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்பதும் இதன் சிறப்பம்சம் ஆகும். 

மேலும் படிக்க | ரெட்மி நோட் 11டி ப்ரோ போனில் தீ பற்றி எரியும் வீடியோ வைரல்!

பேட்டரி
இந்த எலக்ட்ரிக் பைக்கில் 300Wh பேட்டரி உள்ளது, இது 60 கிமீ வரை செல்லும். அதன் எலக்ட்ரிக் ஹப் மோட்டார் மின்சார மிதி/பெடலெக்கை இயக்குகிறது. நூர்டுங் எலக்ட்ரிக் பைக்கை 100W சார்ஜர் மூலம் மூன்று மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். e-bike companion app ஆனது Android மற்றும் iOS சாதனங்களை ஆதரிக்கிறது.

நூர்டுங் இ-பைக் விலை
பிரிக்கக்கூடிய பூம்பாக்ஸ் பிரிவு சாதனத்தை சார்ஜ் செய்வதற்கான பவர் பேங்காகவும் செயல்படுகிறது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் செயலியானது பயணத் தகவல் மற்றும் காற்று மாசு பற்றிய தகவல்களை வழங்குகிறது. நூர்டுங் இ-பைக் தற்போது முன்கூட்டிய ஆர்டருக்குக் கிடைக்கிறது. €6,990க்கு (தோராயமாக ரூ. 5,50,352) முன்கூட்டிய ஆர்டர் செய்யலாம்.

மேலும் படிக்க | Tips and Ticks: வாட்ஸ்அப் மூலம் சுலபமாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்வது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News