சவாரி-பகிர்வுத் துறையில் முதன்முறையாக இந்தியாவின் பிரதாண சவாரி செயலியான ola தனது வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் Guardian சேவையினை அறிமுகம் செய்துள்ளது!
Guardian அமைப்பானது ஒரு உண்மையான நேர கண்காணிப்பு அமைப்பு என ola தெரிவித்துள்ளது. ola வாடிக்கையாளர்களின் சவாரி பாதுகாப்பை வலுப்படுத்த நோக்கத்தில் இந்த அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது ola நிறுவனத்தின் தேசிய பாதுகாப்பு திட்டமான Street Safe திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தற்போது பெங்களூரு, மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தமாதம் அக்டோபர் இறுதியில் டெல்லி மற்றும் கொல்கத்தாவில் இந்த வசதி அறிமுகம் ஆகும் எனவும், இந்த ஆண்டு இறுதிக்குள் மற்ற நகரங்களில் இது பரவும் எனவும் ola தெரிவித்துள்ளது.
இந்த வசதியின் படி, பயணத்திட்டங்கள், எதிர்பாராத மற்றும் மிட்வே நிறுத்தங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சவாரி குறிகாட்டிகளை பகுப்பாய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு நிகழ்நேரத்தில் அறிவிக்கப்படும்.
பயணத்திட்டங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படுவதால் பயணிகளின் பயணத்தின் குறிகாட்டிகள் மற்றும் நேரத்தின் அடிப்படையில், ola-வின் பாதுகாப்பு பதிலளிப்பு குழு (SRT) வாடிக்கையாளர்களின் பயணத்தின் முழுப்பகுதியிலும் உடன் பயணிக்கும் உணர்வை வாடிக்கையாளர்கள் பெருவார் எனவும் ola நிறுவன பாதுகாப்பு பதிலளிப்பு குழு துணைதலைவர் அன்கூர் அகர்வால் தெரிவித்துள்ளார்.