OnePlus நிறுவனமானது தனது புல்லட் வையர்லெஸ் இயர்போனினை வரும் ஜூன் 19-ல் வெளியிடுகிறது!
தன் கேமிராக்களால் தனிப் பெருமையுடன் வெளிவரும் OnePlus நிறுவனத்தின் வையர்லெஸ் புளூடூத் இயர்போனினை வரும் ஜூன் 19-ஆம் நாள் அமேஸான் வலைதளத்தில் அறிமுகம் செய்கின்றது. சரியாக பிற்பகல் 12 மணியளவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் OnePlus 6-னை இந்நிறுவனம் வெளியிட்ட நிலையில் ரூ.3990 இந்த புளூடூத் வையர்லெஸ் இயர்போனினை வெளியிடுகிறது.
அறிமுக சலுகை குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. எனினும் அமேஸான் நிறுவனம் இந்த இயர்போன் குறித்து துனைக்கினை வெளியிட்டுள்ளதால் சிறப்பானஅறிமுக சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இயர்போன் ஆனது ரசிகர்களை கவரக்கூடிய அம்சங்களை கொண்டிருப்பாதாக OnePlus நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி இசைக்கும் பாடல்களை இயக்க பட்டன்களை அழுத்த வேண்டிய அவசியம் இல்லை, மாராக இயர்போனின் மெக்னட்டிக் அமைப்பினை மெல்லியதாக தொட்டால் போதுமானது. இதன் மூலம் ஒருப் பாடலினை நிறுத்துதல், இயக்கவைத்தல் போன்ற செயல்களை செய்யலாம்.
அதேப்போல் இசைகோப்பு, அழைப்புகள் மற்றும் கூகிள் அஸிஸ்டன்ஸ் ஆகிய அம்சங்களை ஒரே பொத்தானில் மாற்றும் வசதியும் இந்த இயர்போனில் உள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த இயர்போனினை வெறும் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும் 5 மணிநேரத்திற்கு பாடல்களை கேட்கலாம். அதேவேலையில் இந்த இயர்போனினை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 8 மணிநேரத்திற்கு பாடல்களை கேட்கலாம் எனவும் தெரிவித்துள்ளது!