ஒன்பிள்ஸ் களமிறக்கும் OnePlus Nord 2T; கண் இமைக்கும் நேரத்தில் முழு சார்ஜ்

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ், OnePlus Nord 2T என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2022, 07:53 PM IST
ஒன்பிள்ஸ் களமிறக்கும் OnePlus Nord 2T; கண் இமைக்கும் நேரத்தில் முழு சார்ஜ் title=

OnePlus Nord 2T: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளைப் பற்றி பேசுகையில், ஒன்பிளஸ் இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான பிரீமியம் பிராண்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் நார்ட் 2டி குறித்து சில நாட்களாக பல செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக யூடியூப்பில் ஒரு வீடியோவில் காணப்பட்டது. இந்த போனை பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்..

OnePlus Nord 2T 

OnePlus இன் இந்த புதிய ஸ்மார்ட்போன், OnePlus Nord 2T ஐ அறிமுகப்படுத்துவதற்கு முன்பு துபாயில் யூடியூபர் சாஹில் கரோல் வாங்கினார், அதன் பிறகு அன்பாக்சிங் வீடியோ மூலம் இந்த தொலைபேசியைப் பற்றிய பல தகவல்கள் வெளி வந்துள்ளன. இந்த வீடியோவில், மூலம் வெளிவந்த அதே அம்சங்களை சாஹல் குறிப்பிட்டுள்ளார். இந்த போனை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

OnePlus Nord 2T செயலி

இந்த சமீபத்திய OnePlus ஸ்மார்ட்போனின் அன்பாக்ஸிங் வீடியோவின் படி, இந்த போனில் MediaTek Dimensity 1300 SoC சிப்செட் செயலி கொடுக்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் AnTuTu பெஞ்ச்மார்க்கில் 622,964 புள்ளிகளையும், Geekbench-ல் இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் டெஸ்டில் 719 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 2760 புள்ளிகளையும் பெற முடியும் என்று வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Google Chrome பயன்படுத்துவோர்க்கு எச்சரிக்கை விடுத்த கூகுள்!

OnePlus Nord 2T போனின் மற்ற அம்சங்கள்

விவரக்குறிப்புகளைப் பற்றி பேசுகையில், OnePlus Nord 2T இல் 6.43-இன்ச் FHD + AMOLED டிஸ்ப்ளே மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்தைப் பெறலாம். இந்த 5G ஸ்மார்ட்போனில் 4,500mAh பேட்டரி மற்றும் 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 50எம்பி ப்ரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட் யூனிட் மற்றும் 2எம்பி மோனோக்ரோம் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை வழங்கலாம். இந்த ஃபோன் 32MP செல்ஃபி கேமராவுடன் வரலாம். டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் அலர்ட் ஸ்லைடர் போன்ற அம்சங்களைக் கொண்ட இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 12ல் வேலை செய்யும்.

இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் வாங்கும் போது தவிர்க்க வேண்டிய 5 மிகப்பெரிய தவறுகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News