OPPO Smartphone: இந்தியாவில் அறிமுகமாகும் Oppo F23 5G! விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

OPPO F23 5G: ஓப்போ எஃப் 23 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.24,999க்கு கிடைக்கிறது, இது உங்களுக்கு போல்ட் கோல்ட் மற்றும் கூல் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.   

Written by - RK Spark | Last Updated : May 27, 2023, 06:47 AM IST
  • 67W சூப்பர் விஓஓசி சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.
  • கேஷ் பேக் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐயை சலுகை வழங்கப்படுகிறது.
  • 256ஜிபி UFS3.1 உள்ளடங்கிய ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
OPPO Smartphone: இந்தியாவில் அறிமுகமாகும் Oppo F23 5G! விலை மற்றும் சிறப்பம்சங்கள்! title=

சீன தொழில்நுட்ப நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போனான ஓப்போ எஃப் 23 5ஜி ஆனது இப்போது இந்தியாவில் ஓப்போ ஸ்டோர், அமேசான் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்கள் உட்பட பல்வேறு இடங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.  இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது, 120Hz டிஸ்ப்ளே, 64எம்பி கேமரா மற்றும் 67W சூப்பர் விஓஓசி சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.  ஓப்போ எஃப் 23 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.24,999க்கு கிடைக்கிறது, இது உங்களுக்கு போல்ட் கோல்ட் மற்றும் கூல் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.  ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பிற முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் மே 18 முதல் மே 31 வரை 6 மாதங்கள் வரை 10 சதவீதம் வரை கேஷ் பேக் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐயை சலுகையை பெற்று பயனடையலாம்.

மேலும் படிக்க | விற்பனையில் சரித்திரம் படைத்த ஐபோனை வெறும் ரூ. 9,140-க்கு வாங்குவது எப்படி?

ஓப்போ எஃப் 23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.72-இன்ச் முழு-ஹெச்டி+ (1,080×2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவுடன் 20:9 விகிதத்துடன், 91.4 சதவீத ஸ்க்ரீன்-டூ-பாடி-ரேஷியோ உடன் வருகிறது.  இது 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது மற்றும் 240Hz டச் ஸேம்ப்ளிங் வீதத்தை கொண்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி, ஆண்ட்ரெனோ 619 ஜிபியூ மற்றும் 8ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.  ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான கலர் ஓஎஸ் 13.1 இல் இயங்குகிறது மற்றும் 256ஜிபி UFS3.1 உள்ளடங்கிய ஸ்டோரேஜை கொண்டுள்ளது.  ஸ்மார்ட்போனின் இணைப்புகள் விருப்பங்களில் 5ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.  

oppo

கேமராக்களைப் பொறுத்தவரை ஓப்போ எஃப் 23 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.  இது 64எம்பி கேமரா, 2எம்பி மோனோ சென்சார் மற்றும் 2எம்பி மைக்ரோ கேமராவும், செல்ஃபி மற்றும் வீடியோ சாட் செய்வதற்கு வசதியாக முன்புறத்தில் 32எம்பி கேமராவையும் கொண்டுள்ளது.  ஓப்போ  எஃப் 23 5ஜி ஸ்மார்ட்போனில் பேட்டரி ஹெல்த் எஞ்சின் மற்றும் சூப்பர் விஓஓசி ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற புதுமையான தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு இருக்கிறது.  இதன் மூலம் மொபைலை வாங்குபவர்கள் நம்பகமான, வசதியான மற்றும் தடையற்ற பேட்டரி செயல்திறனை அனுபவிக்க முடியும்.

மேலும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தற்போது மலிவாக வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் தற்போது ஒன்பிளஸ் போன்களுக்கு தள்ளுபடி சலுகைகளை தருகிறது. OnePlus Nord 2T 5G ஃபோனில் 6.43 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 12 பொருத்தப்பட்டுள்ளது. இது 80W SuperVOOC சார்ஜிங் வேகத்துடன் வருகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு கொண்ட இந்த போன் அமேசானில் ரூ.28,998க்கு கிடைக்கிறது. OnePlus 10R 5G ஃபோன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை சேமிப்பகத்துடன் வருகிறது. இதன் விலை 34,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.  OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் உடன் 256ஜிபி வரை சேமிப்பகத்தைப் பெறுகிறது. சாதனம் 50MP பிரதான கேமரா மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதன் விலை 49,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.  OnePlus 11 5G போன் Snapdragon 8 Gen 2 செயலி இந்த போனில் 16 GB வரை ரேம் மற்றும் 256 GB வரை சேமிப்பகத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 50MP பிரதான கேமராவுடன் வருகிறது. இதன் விலை 56,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

மேலும் படிக்க | Chat GPT: AI செயலிகள் மூலம் அரங்கேற்றப்படும் மோசடிகள்..! மக்களே உஷார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News