பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மியின் ரியல்மி 10 (Realme 10) தொடர் பற்றி அதிகம் பேசப்பட்டது. இன்று ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன், ரியல்மி 10-சீரிஸ் போனாக அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது. இந்த போனில் 6.4-இன்ச் அமோல்ட் பேனல், சமீபத்திய ஹீலியோ ஜி-சீரிஸ் சிப், 50-மெகாபிக்சல் இரட்டை கேமராக்கள் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய பேட்டரி போன்ற முக்கிய அம்சங்கள் உள்ளன. Realme 10 4G இன் விவரக்குறிப்புகள், அம்சங்கள் மற்றும் விலையை பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
Realme 10 4G: விலை மற்றும் கிடைக்கும் தன்மை
Realme 10 4G இந்தோனேசியாவில் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு கான்ஃபிகரேஷனில் வருகிறது. இந்த வகைகளின் விலை முறையே IDR 2,799,000 (Rs 14,563) மற்றும் IDR 3,199,000 (Rs 16,597) ஆகும். இது Clash White மற்றும் Rush Black வண்ணங்களில் கிடைக்கும்.
Realme 10 4G: விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்
Realme 10 போனில் 2400x 1080 பிக்சல்களின் FHD+ தீர்மானம், 90Hz புதுப்பிப்பு வீதம், 360Hz டச் சேம்ப்ளிங் ரேட் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ ஆகிய அம்சங்களுடன் 6.4-இன்ச் சூப்பர் அமோல்ட் திரை உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Realme UI 3.0-அடிப்படையிலான Android 12 இல் இயங்குகிறது. இது மற்ற அம்சங்களுடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (AOD)க்கான ஆதரவைக் கொண்டுவருகிறது.
மேலும் படிக்க | குறைந்த விலையில் மாஸ் காட்டும் BSNL! அதிர்ந்து போன ஜியோ
Realme 10 4G பேட்டரி
இந்த ரியல்மி ஃபோனில் MediaTek Helio G99 SoC, 4GB/8GB LPDDR4x ரேம், 8ஜிபி வரை வர்சுவல் ரேம் மற்றும் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. இந்த போனில் 5000mAh பேட்டரி ஆதரவு உள்ளது. இதை இன்-பாக்ஸ் 33W சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்ய முடியும். பாதுகாப்பிற்காக, பக்கத்தில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.
Realme 10 4G கேமரா
கேமராக்களைப் பொறுத்தவரை, Realme 10 4G ஆனது 50MP முதன்மை கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் பின்புறத்தில் LED ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், தொலைபேசியில் 16 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரியல்மி 10 4ஜி போனில் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், USB Type-C போர்ட், microSD கார்டு ஸ்லாட், டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 AC, புளூடூத் 5.1 மற்றும் NFC ஆகிய அம்சங்கள் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் தோராயமாக 159.9 x 73.3 x 7.95 மிமீ அளவையும் 178.5 கிராம் எடையையும் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | பாதி விலையில் கிடைக்கும் அசத்தல் ஓப்போ ஸ்மார்ட்போன்: கலக்கும் பிளிப்கார்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ