ஜிமெயிலில் இடமே இல்லையா... ஈஸியாக நூற்றுக்கணக்கான மெயில்களை டெலிட் செய்வது எப்படி?

How To Clear Space In Gmail: ஜிமெயிலில் போதிய ஸ்டோரேஜ் இல்லை என்பது பலரின் கவலையாக இருக்கும். அந்த வகையில் தேவையில்லாத மெயில்களை எளிதாக டெலிட் செய்வது எப்படி என்பதை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 9, 2023, 03:03 PM IST
  • 15GB ஸ்டோரேஜை கூகுள் இலவசமாக வழங்கும்.
  • அது முடிந்துவிட்டால் கூடுதல் ஸ்டோரேஜ் பெற கட்டணம் செலுத்த வேண்டும்.
  • இல்லையென்றால், ஸ்டோரேஜை கிளியர் செய்ய வேண்டும்.
ஜிமெயிலில் இடமே இல்லையா... ஈஸியாக நூற்றுக்கணக்கான மெயில்களை டெலிட் செய்வது எப்படி? title=

How To Clear Space In Gmail: கூகுள் குரோம், யூடியூப் போன்ற கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான பிற சேவைகளை பயன்படுத்தும் கிட்டத்தட்ட அனைவருக்கும் ஜிமெயில் கணக்கு இருக்கும். ஜிமெயில் சந்தேகத்திற்கு இடமின்றி உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்களை கொண்ட பொதுவான மின்னஞ்சல் சேவைகளில் ஒன்றாக உள்ளது. 

இணையத்தில் அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் அணுகும் பெரும்பான இணையதளங்கள், செயலிகள் அல்லது சேவைகள், கூகுள் மூலம் உள்நுழைய உங்களை அனுமதிக்கிறது. இது கூகுள் வழங்கும் 15GB இலவச ஸ்டோரேஜை பெரிதும் ஆக்கிரமித்துவிடுகிறது. இதனால், அவர்கள் தங்களுக்கு தேவையான மெயில்களை பெறுவதற்கும் அதனை பார்ப்பதற்கும் குழப்பம் ஏற்படும்.

கூகுள் வழங்கும் இலவச 15GB ஸ்டோரேஜில் புகைப்படங்கள், காண்டாக்ட்ஸ், கோப்புகள் மற்றும் கூகுள் சேவைகளில் சேமிக்கப்பட்ட பிற உள்ளடக்கம் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. மின்னஞ்சல்கள் அவ்வளவு இடத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் ஸ்டோரேஜில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்ளும். இலவச கூகுள் சேமிப்பகம் நிரம்பியதும், கூடுதல் சேமிப்பகத்தை வாங்க நீங்கள் பணம் செலுத்த வேண்டும் அல்லது இலவச இடத்தை உருவாக்க உங்கள் உள்ளடக்கத்தை அழிக்க வேண்டும்.

ஆன்லைன் சேவைகளை அணுகுவதற்கும் உங்கள் தரவைச் சேமிப்பதற்கும் உங்கள் கூகுள் கணக்கை நீங்கள் நம்பினால், உங்களுக்கு 15GB ஸ்டோரேஜ் குறைவாக இருக்கலாம். ஒவ்வொரு மாதமும் அதிக கிளவுட் சேமிப்பகத்திற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் அல்லது உங்கள் தரவில் சிலவற்றை அழிக்க வேண்டும்.

மேலும் படிக்க | இனி பயமில்லாமல் பரிவர்த்தனை செய்யலாம்... ஆர்பிஐ அறிவித்த புதிய வசதி என்ன தெரியுமா?
 
ஆயிரக்கணக்கான தேவையற்ற மின்னஞ்சல்கள் உங்கள் ஜிமெயிலில் அதிக இடத்தை ஆக்கிரமித்திருக்காம். ஆனால் அந்த மெயில்களை நீக்குவது மிகவும் கடினமான வேலையாக இருக்கும், குறிப்பாக ஆயிரக்கணக்கானவற்றை ஒரே நேரத்தில் அழிப்பது சற்று கடினம்தான். ஆனால் உங்கள் மின்னஞ்சல்களை எளிதாக நீக்க உதவும் சில அம்சங்களை கூகுள் வழங்குகிறது. 

தொழில்நுட்ப நிறுவனமானது தானாக அழித்தல் அம்சத்தையும் வழங்குகிறது. இது பயனரால் அமைக்கப்பட்ட Filter-களுக்கு ஏற்ப மின்னஞ்சல்களை தானாகவே நீக்குகிறது. தானாக நீக்கும் அம்சத்தை நீங்கள் தேர்வு செய்யவில்லை என்றால், உங்கள் பழைய மின்னஞ்சல்களை அகற்ற கீழே உள்ள முறையைப் பின்பற்றலாம்.

பெரிய கோப்புகளை அழிக்க...

ஜிமெயில் இடத்தைக் காலியாக்குவதற்கான ஒரு வழி, பெரிய கோப்புகளைக் கொண்ட அதிக MB கொண்ட மின்னஞ்சல்களை நீக்குலாம். ஜிமெயிலில் பெரிய கோப்புகளைக் கொண்ட மின்னஞ்சல்களை நீக்குவதற்கு இதனை பின்பற்றுங்கள்:

- ஜிமெயில் தேடல் பகுதியில், 'has:attachment larger:10M' என டைப் செய்யவும். 10MB க்கும் அதிகமான இடத்தை எடுக்கும் அனைத்து மின்னஞ்சல்களையும் இது காண்பிக்கும்.

- நீங்கள் நீக்க விரும்பும் அனைத்து அஞ்சல்களையும் தேர்ந்தெடுக்கவும்.

- Delete ஐகானைக் கிளிக் செய்யவும். Recycle Bin பகுதிகளிலும் கோப்புகளை அழிப்பதை உறுதிசெய்யவும்.

பழைய மின்னஞ்சல்களை நீக்க...

குறிப்பிட்ட மெயிலை தேட பயனர்களை அனுமதிக்கும் தேடல் பெட்டியுடன் ஜிமெயில் வருகிறது. பழைய மின்னஞ்சல்களைக் கண்டறிந்து நீக்கவும் தேடல் பெட்டியைப் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்ய, தேடல் பெட்டியில் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியைத் டைப் செய்து, மேலே உள்ள 'All' ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் தேடல் வினவலுடன் தொடர்புடைய அனைத்து மின்னஞ்சல்களையும் தேர்ந்தெடுக்கும். இந்த மெயில்களை அழிக்க, Delete ஐகானைத் தட்டவும்.

மேலும் படிக்க | இல்லற வாழ்வை இன்பமாக்க... இதை வீட்டில் வாங்கிப்போடுங்க - அமேசானில் அசத்தல் தள்ளுபடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News