Samsung இன் Live ஷாப்பிங் சலுகை; இந்த பொருட்களில் சிறப்பு தள்ளுபடி

சாம்சங்கின் இந்த live நிகழ்வில், 4 நாட்களுக்கு தொடர்ந்து ஷாப்பிங் செய்வதற்கு அரை மணி நேரம் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 27, 2021, 09:25 AM IST
Samsung இன் Live ஷாப்பிங் சலுகை; இந்த பொருட்களில் சிறப்பு தள்ளுபடி title=

Samsung India Live Shopping Offers: சாம்சங் இந்தியா (Samsung India) தனது இரண்டு நிகழ்வுகளை இந்த ஆண்டு ஏற்பாடு செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நிறுவனம் தனக்கென மற்றொரு நேரடி நிகழ்வை ஏற்பாடு செய்யப் போகிறது. இந்த நிகழ்வு சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளமான Samsung.com இல் அக்டோபர் 27, 30 வரை நேரலையில் இருக்கும். இதில் நீங்கள் பல்வேறு வகையான தயாரிப்புகளில் ஏராளமான சலுகைகளைப் பெறுவீர்கள். இந்த நேரலை நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை நீங்கள் YouTube மற்றும் Facebook இல் பார்க்கலாம். இந்த நேரலை நிகழ்வில், வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் தயாரிப்புகளை சலுகையில் வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது.

சாம்சங் லைவ் ஷாப்பிங் சலுகைகள்
சாம்சங்கின் (Samsung) இந்த நிகழ்வு தொடர்ந்து 4 நாட்கள் இயங்கும். சலுகைகளைப் பெற ஒவ்வொரு நாளும் நீங்கள் அக்டோபர் 27 முதல் அக்டோபர் 30 வரை இரவு 7 மணி முதல் 7:30 மணி வரை அமர்ந்திருக்க வேண்டும். samsung.com/in/live-shopping என்ற இந்த இணைப்பைப் பார்வையிடுவதன் மூலம் நள்ளிரவு வரை வரையறுக்கப்பட்ட தயாரிப்புகளில் தள்ளுபடிகளைப் பெறலாம். இதில், வாடிக்கையாளர்கள் Galaxy Watch 4, Galaxy Tab S7+, Galaxy Tab S7 FE, Sero மற்றும் Neo QLED TVகள், Curd Maestro மற்றும் Digi-Touch Cool ரேஞ்ச் குளிர்சாதனப் பெட்டிகள் என பல தயாரிப்புகளில் சலுகைகளைப் பெறலாம். 

ALSO READ: அசத்தும் Amazon: வெறும் ரூ.1149-க்கு வாங்கலாம் புத்தம் புதிய Samsung Galaxy M12!!

இந்த சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்களில் தள்ளுபடி கிடைக்கும்
நிறுவனம் Galaxy Watch 4, Galaxy Tab S7+ மற்றும் Galaxy Tab S7 FE ஆகியவற்றில் சிறந்த சலுகைகளை வழங்கும். Galaxy Watch 4 Series இன் விலை ரூ. 18,600 ஆகும், இதில் நீங்கள் வரையறுக்கப்பட்ட சலுகைகளைப் பெறுவீர்கள்.

BioActive, ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், பயோஎலக்ட்ரிகல் சான்ட் அனாலிசிஸ் சென்சார், SpO2 டிராக்கிங் மற்றும் ECG சப்போர்ட் ஆகியவையும் இந்த கடிகாரத்தில் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர, Galaxy Tab S7+ மற்றும் Galaxy Tab S7 FE ஆகியவற்றிலும் தள்ளுபடிகள் கிடைக்கும். இந்த டேப்லெட்டுகளின் விலை ரூ.41,999 ஆகும். Curd Maestro மற்றும் Digi-Touch Cool ஆகியவற்றிலும் நீங்கள் தள்ளுபடியைப் பெறலாம்.

ஸ்மார்ட் டிவிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் தள்ளுபடிகள்
Curd Maestro குளிர்சாதன பெட்டி 198 லிட்டர் டைரக்ட்-கூல் சிங்கல் கதவுடன் வருகிறது. இந்த சாம்சங் குளிர்சாதனப் பெட்டிகளை ரூ.17,990 தொடக்க விலையில் வாங்கலாம். அதே நேரத்தில், அதன் ஒரிஜினல் விலை ரூ.45,990 ஆகும். இது தவிர, Digi-Touch Cool குளிர்சாதனப்பெட்டியைப் பற்றி பேசினால், அது 5-in-1 ஒற்றை கதவுடன் வருகிறது. இதில் நீங்கள் பல அருமையான அம்சங்களைப் பெறுவீர்கள். இந்த குளிர்சாதன பெட்டி சேமிப்பு, இடம் மற்றும் வசதிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நிறுவனம் Sero TV மற்றும் Neo QLED TVயிலும் சலுகைகளை வழங்கும்.

ALSO READ: Amazon Great Indian Festival:ரூ.8000-ஐ விட குறைவான விலையில் அசத்தும் ஸ்மார்ட்போன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News