Tata Motors: கார்களின் பழைய விலைக்கு டாட்டா! இன்று முதல் டாடா கார் விலையில் அதிரடி உயர்வு

டாடா மோட்டார்ஸ் இன்று முதல் வாகனங்களின் விலையை உயர்த்துகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 19, 2022, 08:45 AM IST
  • டாடா கார்களின் விலை உயர்ந்தது
  • தயாரிப்பு செலவுகள் அதிகரிப்பால் அதிரடி முடிவு
  • நேற்று அறிவிப்பு! இன்று முதல் விலை உயர்வு!!
Tata Motors: கார்களின் பழைய விலைக்கு டாட்டா! இன்று முதல் டாடா கார் விலையில் அதிரடி உயர்வு title=

புதுடெல்லி: தயாரிப்பு செலவுகள் அதிகரிப்பு காரணமாக, பயணிகள் வாகனங்களின் விலைகளை சராசரியாக 0.9 சதவீதம் உயர்த்துவதாக டாடா நிறுவனம்தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் விலை இன்றுமுதல் கணிசமாக உயர்ந்துவிட்டது.
 
"ஜனவரி 19, 2022 முதல், காரின் வகை மற்றும் மாடலைப் பொறுத்து சராசரியாக 0.9 சதவீதம் விலை அதிகரிப்பு அமலுக்கு வரும்" என்று நிறுவனம் (Tata Motors) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
நிறுவனம் அதிகரித்த செலவினங்களில் கணிசமான பகுதியை உள்வாங்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஒட்டுமொத்த உள்ளீட்டுச் செலவுகளின் செங்குத்தான உயர்வு, குறைந்தபட்ச விலை உயர்வு மூலம் சில விகிதங்களைக் கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


 
இருப்பினும், வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், குறிப்பிட்ட வகைகளில் ரூ.10,000 வரை குறைத்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தெரிவித்துள்ளது.

ஜனவரி 18, 2022 அன்று அல்லது அதற்கு முன் தங்கள் வாகனங்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை உயர்வு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது, ஏனெனில் அவர்களுக்கு பழைய விலையிலேயே வாகங்கள்ல் வழங்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது..

ALSO READ | ஒரே நாளில் 21 புதிய வணிக வாகனங்களை அறிமுகப்படுத்திய Tata Motors
 
Tata Motors நிறுவனம் Altroz, Tiago, Tigor, Punch, Harrier, Safari போன்ற கார்களை விற்பனை செய்கிறது.
 
இடுபொருள் செலவுகள் அதிகரித்து வருவதால், வாகன நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் வாகனங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. கடந்த மாதம், டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக வாகனங்களின் விலையை அதிகரித்தது. 

ஜனவரி 1, 2022 முதல் 2.5 சதவீதம் வரை வர்த்தக பயன்பாட்டுக்கான வாகனங்களின் விலையை உயர்த்துவதாக டாடா மோட்டர்ஸ் கூறியிருந்தது.
 
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா (Maruti cars), உள்ளீட்டுச் செலவுகளின் உயர்வின் தாக்கத்தை ஓரளவு ஈடுகட்டும் வகையில், கார்களின் விலையை 4.3 சதவீதம் வரை அதிகரித்தது.

மாருதி நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை விலைகளை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ஹூண்டாய், மாருதியின் மார்க்கெட்டை காலி பண்ண வரும் Tiago..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News