Google-ன் ‘Look to Speak’ செயலி மூலம் கண்ணால் பார்த்தே வார்த்தைகளை தேர்ந்தெடுக்கலாம் தெரியுமா?

‘Look to Speak’ என்ற இந்த செயலி, தொலைபேசியிலிருந்து சொற்றொடர்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை சத்தமாக உச்சரிக்க, பயனரின் கண்களை பயன்படுத்துகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2020, 08:40 PM IST
  • இந்த செயலியில் கண்கள் கொண்டு, தொலைபேசியிலிருந்து சொற்றொடர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • கண்கள் தெர்வு செய்ததை செயலி பேசும்.
  • பேச்சு மற்றும் செயல்பாட்டு பிரச்சனை உள்ளவர்களுக்கான பிரத்யேக செயலி இது.
Google-ன் ‘Look to Speak’ செயலி மூலம் கண்ணால் பார்த்தே வார்த்தைகளை தேர்ந்தெடுக்கலாம் தெரியுமா? title=

கூகிள் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பேச்சு மற்றும் செயல்பாட்டு சிரமங்கள் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘Look to Speak’ என்ற இந்த செயலி, தொலைபேசியிலிருந்து சொற்றொடர்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை சத்தமாக உச்சரிக்க, பயனரின் கண்களை பயன்படுத்துகிறது.

‘Experiments with Google’ இயங்குதளத்தில் Look to Speak செயலி (App) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை இது போன்ற ஒரு திட்டத்தில் பணிபுரிந்த ஒரு கூகிள் (Google) குழுவும், பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளர் ரிச்சர்ட் கேவ் லுக்கும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

“இது ஒரு நபருக்கு மட்டுமல்லாமல் ஒரு சமூகத்திற்கே உதவியை வழங்ககுவதற்கான ஒரு யோசனையுடன் தொடங்கியது. வடிவமைப்பு செயல்முறையின்போது, இது போன்ற ஒரு தகவல்தொடர்பு கருவியால் பயனடையக்கூடிய ஒரு சிறிய குழுவினரை நாங்கள் அணுகி அவர்களது அனுபவம் பற்றி தெரிந்துகொண்டோம்” என்று கேவ் ஒரு வலைப்பதிவு இடுகையில் கூறினார்.

Look to Speak செயலியை பயன்படுத்த, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை (Smartphone) நேராக, சீராக வைத்திருக்க வேண்டும். எற்கனவே எழுதப்படுள்ள சொற்றொடர்களை தெர்வு செய்ய, பயனர்கள் கண்கள் கொண்டு இடது, வலது அல்லது மேல் பக்கம் பார்க்க வேண்டும். இந்த சொற்றொடர்கள் அடிப்படை தகவல் தொடர்புக்கானவை.

இவற்றில் ஹலோ, நன்றி, கிரேட், ஓ.கே போன்ற அடிப்படை சொற்றொடர்கள் இருக்கும். மேலும், பயனர்கள் மற்றவர்களை கேட்கக்கூடிய பொதுவான கேள்விகள் சிலவும் இதில் இருக்கும். மற்றவரின் பெயர் என்ன, அவர் எப்படி இருக்கிறார், அவர் என்ன செய்கிறார் போன்ற கேள்விகள் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன.

ALSO READ: Alert: 70 லட்சம் ஊழியர்களின் தரவு leak ஆனது: இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் ஜாக்கிரதை!!

தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்றொடர்கள் செயலியில் சத்தமாக வாசிக்கப்படும். பயனர்கள் தங்கள் உண்மையான குரல் குறிப்புகளை செயலியில் சேர்க்கும் ஆப்ஷனும் உள்ளது. இந்த வழியில் சொற்றொடர்கள் மிகவும் தனிப்பயனாக்கப்படும். சொற்றொடர்களை இடது மற்றும் வலது பக்கங்களிலும் திருத்தலாம்.

சொற்றொடர்களை கைமுறையாக, அதாவது மானுவலாக திருத்த வேண்டியிருப்பதால் இதற்கு உதவி தேவைப்படும். செயலியை உறக்கநிலையில் (snooze) வைப்பதற்கான ஒரு ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. Look to Speak செயலி, பயனர்களின் கண் பார்வை உணர்திறனை சரிசெய்யவும் அனுமதிக்கிறது.

Look to Speak செயலி Android 9.0 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் இயங்கும் சாதனங்களில் பயனர்களுக்குக் கிடைக்கும். இது தவிர அனைத்து Android One சாதனங்களிலும் இந்த செயலி கிடைக்கிறது.

ALSO READ: Whatsapp Carts: இந்த புதிய அம்சத்தின் மூலம் எப்படி ஷாப்பிங் செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News