சைலன்ட்டில் வைத்த மொபைலை காணவில்லையா... இனி ஈஸியாக கண்டுபிடிக்கலாம்

Tips To Find Your Lost Silent Mobiles: சைலன்ட் மோடில் இருக்கும் உங்களின் தொலைந்து போன ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதை விரிவாக இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 14, 2024, 05:18 PM IST
  • மொபைல் தொலைந்து போவது வாடிக்கைதான்.
  • இருப்பினும் வீட்டிற்குள்ளேயே மொபைல் காணாமல் போவதும் நடக்கும்.
  • அந்த நேரத்தில் மொபைல் சைலன்டில் இருந்தால் பிரச்னைதான்.
சைலன்ட்டில் வைத்த மொபைலை காணவில்லையா... இனி ஈஸியாக கண்டுபிடிக்கலாம் title=

Tips To Find Your Lost Silent Android/iPhone Mobiles: உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் அதை கண்டுபிடிக்க பல வழிகள் இருக்கின்றன. இருப்பினும் அதை கண்டுபிடிப்பது சற்று கடினம்தான். அதிலும் ஒருவேளை உங்கள் மொபைல் சைலன்ட் மோடில் இருந்து தொலைந்து போனால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஆனால் தற்போது அதை குறித்தும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. 

உங்கள் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தாலும் சரி, வைப்ரேஷன் மோடில் இருந்தாலும் அதனை இப்போது எளிதில் கண்டுபிடிக்கலாம். ஆண்ட்ராய்ட் மொபைல் மட்டுமில்லை ஐபோனையும் நீங்கள் எளிமையாக கண்டுபிடிக்கலாம். அது எப்படி என்பதை இதில் முழுமையாக காணலாம்.

தொலைந்து போன ஐபோனை கண்டுபிடிப்பது எப்படி?

நீங்கள் ஐபோன் பயனர் என்றால் இந்த தகவல் உங்களுக்காகதான். தொலைந்த ஆப்பிள் ஐபோனைக் கண்டுபிடிக்க வோறொரு ஆப்பிள் நிறுவனத்தின் சாதனத்தைப் பயன்படுத்தலாம். அதாவது, ஐபோன் மட்டுமின்றி ஐபேட், மேக் ஆக இருந்தாலும், உங்கள் தொலைந்து போன மொபைலை சைலண்ட் மோடில் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். வேறு எந்த ஆப்பிள் சாதனமும் இல்லாதவர்களுக்கு ப்ரௌசரை பயன்படுத்தலாம். 

மேலும் படிக்க | வாட்ஸ்அப் அப்டேட்: தமிழ் மொழியில் பேசினால் ஆங்கிலத்துக்கு மாற்றும் வசதி விரைவில்..!

இருப்பினும் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. உங்கள் ஐபோனில் Find My iPhone அம்சத்தை நீங்கள் செயல்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு, Settings > Apple Account > Find My என்ற ஆப்ஷனில் இருக்கும் அனைத்து செட்டிங்ஸ்களையும் செயல்படுத்தியிருக்க வேண்டும்.

- உங்கள் ஐபோன் அல்லது வேறு ஆப்பிள் சாதனங்களில் Find My என்ற செயலிக்குள் செல்லுங்கள் அல்லது iCloud.com தளத்தில் Find My Phone ஆப்ஷனுக்கு செல்லவும்.

- அவற்றில் Devices என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். 

- ஸ்கிரீனில் தெரியும் சாதனங்களின் பட்டியலில் உங்களின் தொலைந்து போன ஐபோனை கிளிக் செய்யவும்.

- அதில் Play Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களின் ஐபோன் சைலன்ட் அல்லது வைப்ரேஷன் மோடில் இருந்தாலும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.  

காணாமல் போன ஆண்ட்ராய்ட் மொபைலை கண்டுபிடிப்பது எப்படி?

- முதலில் உங்களின் ஆண்ட்ராய்ட் மொபைலில் லோக்கேஷன் செயலில் இருக்க வேண்டும். அதாவது, ஆண்ட்ராய்ட் மொபைலில் Find My Device ஆப்ஷனை நீங்கள் செயலில் வைத்திருக்க வேண்டும். அதன்படி, கூகுள் கணக்கு மூலம் உங்களின் மொபைலை கண்டுபிடிக்கலாம். 

- உங்களின் வேறு மொபைல் அல்லது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் ஆகியவற்றில் எதிலாவது Chrome ப்ரௌசருக்கு சென்று அதில் இருக்கும் Device Manager ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும். android.com தளத்திற்கு சென்று Google Device Manager ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும். 

- அதில் காணப்படும் உங்கள் சாதனங்களின் பட்டியலில், தொலைந்த போன உங்களின் மொபைலை ஆண்ட்ராய்ட் மொபைலை தேர்வு செய்யவும். 

- பின்னர், அதில் Play Sound ஆப்ஷனை அழுத்த வேண்டும். இதன்மூலம், உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் சைலன்டில் இருந்தாலும், அதில் ரிங் சத்தம் கேட்கும். 

மேலும் படிக்க | வாட்ஸ்அப் எடுத்த அதிரடி நடவடிக்கை! 71 லட்சம் கணக்குகள் முடக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News