ஏப்ரல் மாதத்தில் விற்பனையான டாப் 3 கார்கள்

நீங்கள் புதிய காரை வாங்க முடிவெடுத்திருந்தால், ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 3 கார்கள் எது? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 6, 2022, 11:04 AM IST
  • ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனையான கார்கள்
  • டாப் 3 -ல் மாருதி சுஸூகியின் இரண்டு கார்கள்
  • டாப் 10-ல் ஹூண்டாய் மற்றும் பிரெஸ்ஸா இடம்பெற்றுள்ளன
ஏப்ரல் மாதத்தில் விற்பனையான டாப் 3 கார்கள் title=

பொருளாதார தட்டுப்பாடு இருந்தாலும், கார்களின் விற்பனை கொடி கட்டி பறந்து கொண்டு தான் இருக்கின்றன. விற்பனையில் சதவீத அடிப்படையில் சில சரிவுகள் இருந்தாலும், மிகப்பெரிய சரிவு என குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு ஆட்டோமொபைல் துறை மோசமாக இல்லை என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார கார்கள் என மக்கள் தங்களின் வசதிக்கேற்ப புதிய கார்களை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

அந்தவகையில், கடந்த ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான கார்களின் நிலவரம் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. வழக்கம்போல் மாருதி முதல் ஹூண்டாய் வரையிலான கார்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் டாப் 3 கார்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க | இந்திய அரசியலை புரட்டும் ’புல்டோசர்’ வரலாறு

மாருதி வேகன் ஆர் 

இந்த மாடல் கார் மாருதி நிறுவனத்தில் அதிக விற்பனையான கார்களில் ஒன்றாக உள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் நாட்டில் அதிகம் விரும்பப்பட்ட காராக மாறியுள்ளது. மாருதி சுஸுகியின் இந்த மாருதி வேகன்ஆர் கார் 17,766 யூனிட்கள் ஏப்ரல் 2022 -ல் மட்டும் விற்பனையாகியுள்ளன. விற்பனையில் கோலோச்சியிருக்கும் இந்தக் கார் மக்கள் விருப்பும் கார் பட்டியலிலும் முன்னணியில் இருப்பது தெளிவாகியுள்ளது. 

மாருதி எர்டிகா: 

மாருதி எர்டிகா, எம்பிவி பிரிவில் பிரபலமான மாடலாக உள்ளது.  அண்மையில் புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தில் அறிமுகமானது. ஏப்ரல் 2022-ல் விற்பனை புள்ளி விவரத்தில் மாருதி சுஸுகியின் மாருதி எர்டிகாவின் 14,889 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. மேலும், மக்கள் அதிகம் விரும்பியுள்ள எம்பிவி பட்டியல் கார்களில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதேநேரத்தில் இந்த கார் வெறும் 7 ஆயிரம் யூனிட்களை மட்டுமே விற்பனையாகி இருந்தது. 

டாடா நெக்ஸான்:

டாடா நெக்ஸான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மற்றும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும். விலை மற்றும் சிறப்பம்சங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்பால் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. Tata Motors ஏப்ரல் 2022-ல் 13,471 யூனிட் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் அதிகம் விற்பனையான கார்கள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் காரின் வளர்ச்சி விகிதமானது 94 விழுக்காடு உயர்ந்துள்ளது. 

இந்தக் கார்களைத் தவிர ஹூண்டாய் க்ரெட்டா நான்காவது இடத்திலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஐந்தாவது இடத்திலும், மாருதி ஈகோ ஏழாவது இடத்திலும் உள்ளன. மாருதி பலேனோ எட்டாவது இடத்திலும், மாருதி டிசையர் ஒன்பதாவது இடத்திலும், மாருதி ஆல்டோ பத்தாவது இடத்திலும் விற்பனையில் இருக்கின்றன.

மேலும் படிக்க | கோடையில் கார் டயர் பஞ்சராகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News