வோடபோன் ஐடியா சூப்பர் பிளான்: அமேசான் பிரைம் ஆண்டு முழுவதும் இலவசம்

Vodafone Idea: அமேசான் பிரைம் ஆண்டு முழுவதும் இலவசமாக பார்க்க வேண்டும் என விரும்பினால், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சூப்பர் ரீச்சார்ஜ் பிளானை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Feb 26, 2024, 02:20 PM IST
  • வோடாபோன் ஐடியா ரீச்சார்ஜ் பிளான்
  • ஒரு ஆண்டுக்கு அமேசான் பிரைம் இலவசம்
  • டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்
வோடபோன் ஐடியா சூப்பர் பிளான்: அமேசான் பிரைம் ஆண்டு முழுவதும் இலவசம்

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi), ரீச்சார்ஜ் பிளான்களுடன் ஓடிடி சேவைகளையும் சேர்த்துள்ளது. நீங்கள் அமேசான் பிரைம் ஓடிடியில் விரும்பும் படங்களை பார்த்து ரசிக்கலாம். அதற்கேற்ப இப்போது ரீச்சார்ஜ் பிளானுன் கூடுதல் சலுகையாக அமேசான் சந்தாவையும் கொடுத்திருக்கிறது. வோடாபோன் ஐடியா. ஏற்கனவே, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், Zee5 மற்றும் நெட்பிளிக்ஸ் என ஓடிடி சந்தாக்களை மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுடன் கொடுக்கும் நிலையில் வோடாபோன் ஐடியாவும் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளது. அந்தவகையில் ஒரு ஆண்டுக்கு அமேசான் பிரைம் ஓடிடி சந்தா எந்த திட்டத்தில் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்வோம்.  

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இனி ஸ்விக்கியில் ஆர்டர் செய்து கொள்ளலாம்!

அமேசான் பிரைம் ஒரு ஆண்டு சந்தா இலவசமாக கிடைக்கும் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் ரீச்சார்ஜ் பிளான் விலை ரூ.3199. இந்த திட்டத்தில் யூசர்கள் தினசரி அடிப்படையில் 2ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். அத்துடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பலாம். மேலும் இந்த திட்டத்தில் Vi Movies & TV சந்தாவும் கிடைக்கிறது. அதாவது அமேசான் ஓடிடி சந்தாவுடன் சேர்ந்து இரட்டிப்பு பொழுதுபோக்கைப் பெறுகிறீர்கள். இந்தத் திட்டத்தில் ஹீரோ அன்லிமிடெட், பிங்கே ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் போன்ற பலன்களும் கிடைக்கும்.

இதேபோன்ற திட்டத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை நீங்கள் விரும்பினால், அதற்கான ஆப்சனையும் வோடாபோன் ஐடியா கொடுத்திருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 1 வருடத்திற்கு பொழுதுபோக்கு அம்சங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் நீங்கள் ரூ.3099 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். ரூ.3199 திட்டத்தில் உள்ள மற்ற நன்மைகள் அப்படியே இந்த திட்டத்திலும் இருக்கும். அதனால், உங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வேண்டுமா? அமேசான் பிரைம் வேண்டுமா? என்பதை வாடிகைகயாளராகிய நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க |  ஏர்டெல் பயனர்கள் கவனத்திற்கு... பிரீபெய்டில் புதிய ரீசார்ஜ் பிளான் - விலையும் கம்மிதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News